ஹன்சிகாவை அடுத்து விஷால் பட நடிகையின் செல்போன் ஹேக்
சென்னை: நடிகை பூஜா தேவரியாவின் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
மணிகண்டனின் குற்றமே தண்டனை, கார்த்திக் சுப்புராஜின் இறைவி ஆகிய படங்களில் சிறப்பாக நடித்து பலரையும் கவர்ந்தவர் பூஜா தேவரியா. அவரின் செல்போனை யாரோ ஹேக் செய்துள்ளார்கள்.
தன் போன் ஹேக் செய்யப்பட்டதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பூஜா.
பூஜா
உங்களிடம் என் செல்போன் எண் இருந்தால் தயவு செய்து பிளாக் செய்யுங்கள். என் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. யாரோ என் வாஸ்ட்ஆப்பை பயன்படுத்தி குடும்பத்தார் மற்றும் திரையுலக நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்புகிறார். அந்த மெசேஜுக்கு பதில் அளிக்க வேண்டாம். என் நம்பரை பிளாக் செய்யவும் என்று பூஜா ட்வீட் செய்துள்ளார்.
புகார்
செல்போன் ஹேக் செய்யப்பட்டது குறித்து பூஜா இதுவரை போலீசில் புகார் அளிக்கவில்லை. அவரின் செல்போன் எண் என்ன ஆனது என்று குறித்து அதற்கு பிறகு அவர் ட்வீட் எதுவும் செய்யவில்லை. பூஜா தற்போது விஷாலின் அயோக்யா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

புகார்
செல்போன் ஹேக் செய்யப்பட்டது குறித்து பூஜா இதுவரை போலீசில் புகார் அளிக்கவில்லை. அவரின் செல்போன் எண் என்ன ஆனது என்று குறித்து அதற்கு பிறகு அவர் ட்வீட் எதுவும் செய்யவில்லை. பூஜா தற்போது விஷாலின் அயோக்யா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேகா ஆகாஷ்
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வந்தா ராஜாவாதான் வருவேன் பட நடிகை மேகா ஆகாஷின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு ரஷ்யாவை சேர்ந்த டிஜேவின் புகைப்படங்கள் அப்லோடு செய்யப்பட்டது. இந்நிலையில் பூஜாவின் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

ஹன்சிகா
முன்னதாக நடிகைகள் ஏமி ஜாக்சன், அக்ஷரா ஹாஸன், ஹன்கிசா ஆகியோரின் சமூக வலைதள கணக்குள் ஹேக் செய்யப்பட்டன. இதையடுத்து அவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











