“விஷால்31“ படத்திற்கு பூஜை போட்டாச்சு… விரைவில் படத்தை முடிக்க படக்குழு முடிவு !
சென்னை : நடிகர் விஷால் நடிக்க உள்ள புதிய படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டது.
இப்படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
தேவி2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டிம்பிள் ஹாயதி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
சக்ரா படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷால் எனிமி திரைப்படத்தில் கவனத் செலுத்திவருகிறார். ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆர்யா வில்லனாக
இப்படத்தை வினோர் தயாரித்து வருகிறார், ஆர்.டி.ராசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஆர்யா வில்லான நடித்துள்ளார். அவன் இவன் படத்திற்கு பிறகு விஷால் , ஆர்யா இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவி உள்ளது.

பூஜை போட்டாச்சு
எனிமி படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. இப்படத்திற்கு விஷால்31 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் ஒரே கட்டமாக படத்தை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும், படப்பிடிப்பு, இறுதிக்கட்டப்பணிகள் என அனைத்தையும் முடித்து ஆகஸ்ட் மாதத்திலேயே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசை
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தேவி2 திரைப்படத்தி ன் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமான டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், எடிட்டராக என்.பி.ஸ்ரீகாந்த், ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியம் ஆகியோர் பணிபுரிகின்றனர்.


Click it and Unblock the Notifications











