போன மாதம் நிச்சயதார்த்தம், இந்த மாதம் முறிவு: இது பூஜா காந்தி கூத்து
பெங்களூர்: கன்னட நடிகை பூஜா காந்தி தனக்கு நிச்சயித்த மாப்பிள்யை மணக்க மாட்டாராம்.
கடந்த 2003ம் ஆண்டு அறிமுகமான பூஜா காந்தி இன்றைய தேதியில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். அவர் ஏராளமான கன்னட படங்களில் நடித்துள்ளார். அவரது தங்கை ராதிகா காந்தியும் கன்னட படங்களில் நடிக்கிறார். கொக்கி படம் மூலம் பூஜா காந்தி கோலிவுட்டுக்கு வந்தார்.
தண்டுபாளையா என்ற படத்தில் சங்கிலி தொடர் கொலையாளிகளில் ஒருவராக நடித்த அவர், சில காட்சிகளில் அரை நிர்வாண காட்சியில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். சினிமாவில் மட்டுமல்லாது சமூக சேவையிலும் அவருக்கு நாட்டம் உண்டு. ஜனதா தளம்(எஸ்) தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமியின் அழைப்பை ஏற்று பூஜா காந்தி அரசியலில் குதித்தார். குமாரசாமி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி எதியூரப்பாவின் கட்சியில் சேர்ந்துவிட்டார்.

நவம்பர் 15ல் நிச்சயதார்த்தம்
பூஜா காந்திக்கும், பைனான்ஸ் தொழில் செய்து வருபவரும், ரியல் எஸ்டேட் அதிபருமான ஆனந்த் கவுடாவுக்கும் கடந்த மாதம் 15ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் மார்ச் மாதம் திருமணம் என்று கூறப்பட்டது.

திரையுலகினருக்கு பார்ட்டி
நிச்சயதார்த்தத்தையடுத்து நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் அவர்கள் பார்ட்டி கொடுக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.

கட்சி தாவலால் வந்த வினை
குமாரசாமியின் கட்சியில் இருந்த பூஜா காந்தி எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சிக்கு சென்றது ஆனந்த் கவுடாவுக்கு பிடிக்கவில்லையாம். ஏனென்றால் ஆனந்த் குமாரசாமியின் ஆதரவாளர். இது தான் அவர்கள் பிரியக் காரணம் என்று கூறப்படுகிறது.

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு பிரிந்தனர்
நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு மாதத்தில் இருவரும் ஆளுக்கொரு திசையாக சென்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











