Pooja Hegde: மகேஷ் பாபு படத்துக்கு என்ன பிரச்சனை.. திடீரென விலகிய பூஜா ஹெக்டே.. அட அவரும் இல்லையா?

ஹைதராபாத்: இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் ஸ்ரீலீலா என இரு ஹீரோயின்கள் நடித்து வந்த நிலையில், பூஜா ஹெக்டே தற்போது அந்த படத்தில் இருந்து விலகப் போவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பல படங்கள் தொடர்ந்து படு தோல்வியை சந்தித்தன.

பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சார்யா, கிஸி கா பாய் கிஸி கி ஜான் என கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல பெரிய படங்களில் நடித்தும் அவருக்கு ஹிட் கிடைக்கவில்லை.

 Pooja Hegde and Music Director Thaman exit from Mahesh Babus Guntur Kaaram?

படுதோல்வியை சந்தித்த பூஜா ஹெக்டே: விஜய், ராம்சரண், பிரபாஸ் மற்றும் சல்மான் கான் என முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தும் பூஜா ஹெக்டேவுக்கு எந்த படமும் சரியாக போகவில்லை.

இந்நிலையில், மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படம் அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு, ஸ்ரீலீலாவுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார் பூஜா ஹெக்டே.

அதிரடி விலகல்: படத்தின் ஷூட்டிங் சொன்னபடி நடக்கவில்லை என்றும் கால தாமதம் ஆனதன் காரணமாக ஜூன் முதல் நவம்பர் மாதம் வரையில் அந்த படத்துக்கு தன்னால் கால்ஷீட் ஒதுக்க முடியாது என்கிற முடிவுக்கு வந்த பூஜா ஹெக்டே அதிரடியாக தற்போது அந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

 Pooja Hegde and Music Director Thaman exit from Mahesh Babus Guntur Kaaram?

மகேஷ் பாபுவுடன் ஏற்கனவே மகரிஷி உள்ளிட்ட படங்களில் ஜோடி போட்டு நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கண்ட பூஜா ஹெக்டே இப்படி மகேஷ் பாபுவின் படத்தில் நடிக்க முடியாது எனக் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தமன் வெளியேற்றம்: மேலும், இந்த படத்தில் இருந்து இசையமைப்பாளர் தமனும் அதிரடியாக வெளியேறி உள்ளதாக கூறுகின்றனர்.

குண்டூர் காரம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் பிரச்சனை தான் இப்படி இசையமைப்பாளர், ஹீரோயின் என அடுத்தடுத்து வெளியாக காரணம் என்றும் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

 Pooja Hegde and Music Director Thaman exit from Mahesh Babus Guntur Kaaram?

தமனுக்கு பதில் அனிருத்: குண்டூர் காரம் படத்தில் இருந்து தமன் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக இசையமைப்பாளர் அனிருத் அந்த படத்துக்கு இசையமைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குண்டூர் காரம் படத்தை விரைவில் முடித்து விட்டு ஆகஸ்ட் மாதம் முதல் ராஜமெளலி படத்தில் நடிக்க மகேஷ் பாபு செல்ல உள்ள நிலையில், இப்படி அடுத்தடுத்து பிரச்சனைகள் கிளம்பி வருகிறதே என டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சுக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

மகேஷ் பாபு படத்தை விட்டு விட்டு அப்படி பூஜா ஹெக்டே என்ன படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் என்கிற கேள்வியும் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X