விறுவிறுப்பாக ரெடியாகும் ‘பீஸ்ட்‘…. படப்பிடிப்புக்காக பறந்து வந்த பூஜா ஹெக்டே !
சென்னை : நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக சென்னை வந்துள்ளார்.
இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கலையொட்டி வெளியாகிறது.

பீஸ்ட்
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்றது. நான்காம் கட்டப் படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட அரங்கில் நடத்தினர் படக்குழுவினர். இதை முடித்துக்கொண்டு டெல்லி சென்ற படக்குழுவினர் அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பை தொடங்கினர்.

படப்பிடிப்பில்
டெல்லியில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து, படக்குழுவினர் சென்னை திரும்பினர். தற்போது சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். அதில் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கலந்து கொள்கிறார்.

ஸ்டைலான போஸ்
இதற்காக சென்னை வந்துள்ள பூஜா ஹெக்டே, தனது சமூக வலைத்தளத்தில் விமான நிலையத்தில் காத்திருக்கும்போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், கோட் மற்றும் பூட்ஸில் ஸ்டைலாகத் தெரிகிறார். கொரோனாவின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக பூஜா முககவசம் அணிந்து கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார். மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக "திரைப்படம் எடுக்கும் நேரம்" என்று எழுதியுள்ளார்.

நவம்பருக்குள்
பூஜா ஹெக்டே ஏற்கனவே கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்ற இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். அதற்கு பிறகு விஜய், செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பூஜா ஹெக்டே மீண்டும் பீஸ்ட் திரைப்படக்குழுவுடன் இணைந்துள்ளார். நவம்பர் இறுதியில் பீஸ்ட் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்பதால் படத்தின் புரமொஷன் பணிகளை அண்ணாத்த படம் வெளியான பிறகே தொடங்கவுள்ளனர்.

3 படங்களில்
பூஜா ஹெக்டே தற்போது சர்க்கஸ் மற்றும் ராதே ஷியாம் என்ற இந்தி திரைப்படத்திலும், ஆச்சார்யா என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











