லாக்டவுன்லயும் சும்மா இருக்க முடியல... பூஜா ஹெக்டே வீட்ல என்ன செய்றாங்கன்னு பாருங்க!
ஐதராபாத் : நாடெங்கிலும் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவை அடுத்து லாக்டவுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. அனைவரும் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாமல் உள்ளனர்.
இந்நிலையில் தளபதி 65 பட நாயகி பூஜா ஹெக்டேவும் தனது வீட்டிற்குள் முடங்கியுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்
நடிகர் விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் பூஜா ஹெக்டே. தற்போது ரன்வீர் சிங்குடன் சிர்க்கஸ் பிரபாசுடன் ராதே ஷ்யாம் என இவர் நடித்துள்ள படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் சல்மான் கானுடன் அடுத்த படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

பாசிட்டிவ் மனநிலை
சமீபத்தில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளான இவர், அதிலிருந்து மீண்டு வந்தார். இந்த நேரத்தில் அவருக்கு கைகொடுத்தது மெடிடேஷன், மூச்சுப் பயிற்சி மற்றும் புத்தகங்கள். இவை தனக்கு நல்ல பாசிட்டிவ் மனநிலையை கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ வெளியிட்ட பூஜா
சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஆக்சிமீட்டரை பயன்படுத்துவது குறித்த விளக்கத்தை தெரிவித்திருந்தார். தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட போது தன்னுடைய ஆக்சிஜன் அளவை பார்க்க தனக்கு பயிற்றுவிக்கப் பட்டதாகவும் அதுவரை அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

லாக்டவுனால் முடக்கம்
மேலும் தான் அந்த வீடியோவை வெளியிட்டது மற்றவர்களுக்கு கண்டிப்பாக உபயோகமாக இருக்கும் என்றும், அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் அவர் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்த அவர், லாக்டவுனையடுத்து வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பிசியான பூஜா ஹெக்டே
ஆயினும் இந்த நேரத்தை அவர் பயனுள்ள வகையில் செலவிட்டு வருகிறார். வீட்டிலேயே புதிய ஸ்கிரிப்ட்களை படித்து வருகிறார். இதன்மூலம் வீட்டில் இருந்தாலும் தன்னை மிகவும் பிசியாக வைத்துக் கொண்டுள்ளார். இதன்மூலம் தன்னுடைய கேரக்டர்கள் குறித்த புரிதலை அவர் ஏற்படுத்தி வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











