பூஜா ஹெக்டே வாங்கிய புதிய சொகுசு கார்..விலையை கேட்டால் தலையே சுற்றிடும்..அப்படி என்ன ஸ்பெஷல் கார்ல!

சென்னை: நடிகை பூஜா ஹெக்டே புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். அதன் விலையை ரசிகர்கள் அனைவரும் ஆத்தாடி அத்தனை கோடியில் காரா என வாயடைத்து போய் உள்ளனர்.

மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை 15 படங்களில் நடித்துள்ளார்.

pooja hegde buys new range rover car cost around 5 crore

விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாக முடியும் என்று எதிர்பார்த்து பூஜா ஹெக்டே காத்திருந்த நிலையில், படத்திற்கு நெகடிவ் கமெண்டுகள் வந்தால், தமிழில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் போனது.

நடிகை பூஜா ஹெக்டே: தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து உருவாகி வரும் ஜன கன மன என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த இரண்டு படமும் பிளாப் ஆகி விட்டதால், தமிழ் சினிமாவிற்கு பாய் பாய் சொல்லி ஹிந்தி சினிமாவில் நுழைந்தார். விஜய், பிரபாஸ், சல்மான் கான், ராம்சரண் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் பூஜா ஹெக்டேவின் சம்பளம் மட்டும் 20 கோடி என்று கூறப்படுகிறது.

ஆக்ஷன் காட்சிக்காக: அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில், பூஜாவுக்கு மிரட்டலான ஒரு ஆக்ஷன் காட்சி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அக்ஷன் காட்சிக்காக வெளிநாட்டு பயிற்சியாளரை வைத்து பயிற்சி எடுத்துக்கொண்டார். இந்த பயிற்சியின்போது சமீபத்தில் இவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

புது சொகுசு கார்: இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரின் ஆரம்ப விலையே 2.39 கோடியாகும். அதனுடன் வசதிகள் அதிகம் உள்ள காரை பூஜை வாங்கி உள்ளதாக தெரிகிறது. இதன் விலை மட்டும் சுமார் 5 கோடியாகும் என கூறப்படுகிறது. இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வீடியோவிற்கு ரசிகர்கள் பலர் ஹார்ட் எமோஜிக்களை பறக்க விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X