Pooja Hegde Net Worth: மாலத்தீவில் மஜா பார்ட்டி.. பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
சென்னை: Pooja Hegde birthday and net worth - மும்பையில் பிறந்து வளர்ந்த பூஜா ஹெக்டே பாலிவுட்டில் சினிமா படங்கள் நடிக்க வாய்ப்புத் தேடிய நிலையில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் தவித்து வந்தார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.
1990 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த பூஜா ஹெக்டே இன்று மாலத்தீவில் தனது 33 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கோலிவுட்டில் அறிமுகமானாலும் பூஜாவுக்கு கோலிவுட்டில் தான் மிகப்பெரிய வரவேற்பும் வெற்றி படங்களும் அமைந்தன.

டோலிவுட்டில் கிடைத்த வெற்றி: அல்லு அர்ஜுன் உடன் இவர் இணைந்து நடித்த துவடு ஜெகநாதம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் கோலிவுட் மற்றும் இந்தி படங்களில் நடிக்க அதிக அளவிலான வாய்ப்புகள் அமைந்தன. ரித்திக் ரோஷனுடன் மொகஞ்சதாரோ எனும் பாலிவுட் படத்தில் நடித்திருந்தார். மகேஷ்பாபுவுடன் இணைந்து மகரிஷி படத்தில் நடித்திருந்தார். மீண்டும் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து இவர் நடித்த அலா வைகுண்டபுரமுலோ படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் பீஸ்ட் படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக மாறினார்.
சொத்து மதிப்பு: ஆரம்பத்திலிருந்து வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்து வந்த பூஜா ஹெக்டே கடந்த 2 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நான்கு படங்கள் தொடர்ந்து சொதப்பிய நிலையில் கடும் அப்செட் ஆகிவிட்டார். மேலும் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் படத்திலிருந்து அதிரடியாக பூஜாவை நீக்கிவிட்டனர்.
ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சாரியா, வீரம் இந்தி ரீமேக் என வரிசையாக தோல்விகளை சந்தித்து வந்த பூஜா ஹெக்டேட் தனது 33-வது பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவுக்கு சென்றுள்ளார். படங்கள் தோல்வி அடைந்தாலும், பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து சம்பளத்தை அள்ளிப் போட்டுக் கொண்ட பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிரடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு 50 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரராக இருந்த பூஜா ஹெக்டே, 66 கோடி ரூபாய் சொத்துக்களுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு படத்துக்கு சம்பளமாக சுமார் 4 கோடி ரூபாயை பூஜா ஹெக்டே வாங்கி வருவதாகவும், ஆந்திரா மற்றும் மும்பையில் இவருக்கு தனியாக அடுக்குமாடி குடியிருப்புகள் இருப்பதாகவும் பல விளம்பரங்களிலும் நடித்து கூடுதல் சம்பாத்தியத்தை அடைந்து வருவதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











