புட்டபொம்மா புகழ் பூஜா ஹெக்டேவுக்கு இன்று பிறந்தநாள்.. ஆரவாரமாக கொண்டாடிய ரசிகர்கள்!

ஹைதராபாத் : சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுண்டபுரம்லோ திரைப்படத்தின் மூலம் உலகெங்கிலும் புட்ட பொம்மாவாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கும் பூஜா நடிப்பு என்று வந்துவிட்டால் அனைவரும் வியக்கும் அளவிற்கு பட்டையை கிளப்பி விடுவார்.

இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகிவரும் ராதே ஷ்யாம் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே அக்டோபர் 13ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து ஆரவாரமாக கொண்டாடி வருவதோடு திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதீத அழகு

அதீத அழகு

பிரபலமான பல மாடலிங்க் போட்டிகளில் பங்கேற்று வெற்றி கோப்பையை தட்டிச்சென்று பேரழகியாக வலம் வந்த பூஜா ஹெக்டே 2010 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2010 பட்டத்தை வென்றார். அதீத அழகு கொண்ட இவரை திரைப்படங்களில் காண ஆரம்ப புள்ளியாக அமைந்தது தமிழில் வெளியான முகமூடி திரைப்படம்.

கவனத்தை ஈர்க்காத

கவனத்தை ஈர்க்காத

மாடல் அழகியாக வலம் வந்த பூஜா ஹெக்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான சூப்பர் ஹீரோ திரைப்படமான முகமூடியில் கதாநாயகியாக முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார். எனினும் அந்த திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காத நிலையில் பூஜாவுக்கும் முகமூடி திரைப்படம் மிகப்பெரிய அறிமுக படமாக அமையவில்லை.

அனைவருக்கும் பரிச்சயமானார்

அனைவருக்கும் பரிச்சயமானார்

அதைத் தொடர்ந்து தெலுங்கில் நடிப்பதில் கவனம் செலுத்திய பூஜா அங்கு பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க இந்தித் திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த பூஜா அதேசமயம் ஹிந்தியில் ரித்திக் ரோஷன், அக்ஷய்குமார் என உச்ச ஹீரோக்களுடன் ஜோடி போட இந்தியா முழுவதும் அனைவருக்கும் பரிச்சயமானார்.

புட்ட பொம்மா

புட்ட பொம்மா

இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி உலகம் முழுவதும் சக்கைபோடு போட்டு பல மொழி ரசிகர்களையும் கவர்ந்த அலா வைகுண்டபுரம்லோ திரைப்படத்தில் புட்ட பொம்மா என்ற பாடல் இவரை பட்டிதொட்டியெங்கும் சென்றடைய வைத்தது மட்டுமல்லாமல் முன்னணி நடிகைகளின் பட்டியலிலும் இணைத்தது.

 பல வசூல் சாதனைகளை

பல வசூல் சாதனைகளை

பாகுபலி தொடர்ச்சிக்கு பிறகு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நடிகர் பிரபாஸின் மார்க்கெட் உயர்ந்த நிலையில் அடுத்தடுத்து இவர் நடிக்கும் திரைப்படங்கள் உலக அளவில் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

எதிர்பார்ப்பு கூடியுள்ளது

எதிர்பார்ப்பு கூடியுள்ளது

இந்நிலையில் பாகுபலி, சாகோ உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து இப்பொழுது பிரபாஸ் நடித்து வரும் ராதே ஷ்யாம் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வருவதால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

பிறந்த நாள்

பிறந்த நாள்

இவ்வாறு படத்துக்கு படம் பூஜா ஹெக்டே செய்யும் மாயாஜாலங்கள் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த நிலையில் இப்பொழுது உச்ச நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அக்டோபர் 13 ஆம் தேதியான இன்று பூஜா ஹெக்டே தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களின் வாயிலாக ஆரவாரமாக கொண்டாடி வரும் நிலையில் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியவாறு திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X