விஜய் பங்கேற்காமல் நடந்த பீஸ்ட் பிரஸ் மீட்.. பூஜா ஹெக்டே உடன் நடனமாடிய அனிருத், நெல்சன்!

ஹைதராபாத்: பீஸ்ட் படத்தின் ரிலீஸை முன்னிட்டு ஹைதராபாத்தில் டோலிவுட் ரசிகர்களுக்காக சிறப்பான பிரஸ் மீட் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே, இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியையே பீஸ்ட் படத்தை தெலுங்கில் வாங்கி வெளியிடும் தில் ராஜு தான் ஏற்பாடு செய்திருக்கிறார் என்பது தெரிகிறது.

சைலன்ட்டான சன் பிக்சர்ஸ்

சைலன்ட்டான சன் பிக்சர்ஸ்

சர்க்கார் படத்திற்கு பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்திய சன் பிக்சர்ஸ் இந்த முறை பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழாவை நடத்த முடியாத சூழலில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றன. வெறும் நடிகர் விஜய் மற்றும் நெல்சன் பங்குபெறும் சிம்பிளான பேட்டி மட்டுமே படத்திற்கு புரமோஷனாக மாறி உள்ளது.

பீஸ்ட் பிரஸ் மீட்

பீஸ்ட் பிரஸ் மீட்

இந்நிலையில், டோலிவுட்டில் பீஸ்ட் படத்தை புரமோட் செய்யும் விதமாக பிரஸ் மீட் நிகழ்ச்சி ஒன்று இன்று எந்தவொரு அறிவிப்பும் இன்றி நடைபெற்றது. அதில், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் தில் ராஜு இந்த பிரஸ் மீட் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் பங்கேற்கவில்லை

விஜய் பங்கேற்கவில்லை

நடிகர் விஜய்யின் குட்டி ஸ்டோரி இல்லாமல் விஜய் படத்தின் நிகழ்ச்சி நடைபெறுவது சமீப காலத்தில் இதுதான் முதல் முறையாக இருக்கும். அந்த அளவுக்கு ரொம்பவே எளிமையாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. விஜய் பங்கேற்காத நிலையில், டோலிவுட்டை சேர்ந்த விஜய் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆனார்கள். சமீபத்தில் தளபதி 66 பூஜை மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விஜய் ஏன் இந்த பிரஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

விஜய் பார்ப்பாரான்னு தெரியல

விஜய் பார்ப்பாரான்னு தெரியல

நடிகை பூஜா ஹெக்டே சிகப்பு கலரில் டைட் டாப் அணிந்து கொண்டு செம கவர்ச்சியாக நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். மேடையில், ஏறி பேசிய அவர் நடிகர் விஜய்யை பற்றி புகழ்ந்து பேசி விட்டு, இதை விஜய் பார்ப்பாரா என்று கூட தெரியவில்லை. விஜய்யை நான் ரொம்பவே மிஸ் பண்றேன் என சொன்னதும், ஏகப்பட்ட குரல்கள் கிளம்ப, இங்கே உள்ள அனைவரும் மிஸ் பண்றோம்னு மாற்றி பேசினார்.

Recommended Video

Sunil Reddy Exclusive | Beast ல ஒரு Fight மாசா இருக்கும் | Filmibeat Tamil
நெல்சன், அனிருத் உடன் டான்ஸ்

நெல்சன், அனிருத் உடன் டான்ஸ்

இயக்குநர் நெல்சன் பற்றி பேசிய பூஜா அவர் வேறமாறி இயக்குநர் எனக் கூறினார். அதே போல அனிருத்தின் தீவிர ஃபேன் நான் என பேசிய பூஜா ஹெக்டே, இருவரையும் மேடைக்கு அழைத்து அரபிக் குத்து பாடலுக்கு நடனமாட சொன்னார். நெல்சன் சற்று தயங்கிய படி ஆடாமல் நிற்க, அனிருத் பூஜா ஹெக்டேவுடன் இணைந்து சில ஸ்டெப்களை போட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X