ஹலோ ஹலோ.. நீங்களே இஷ்டத்துக்கு நினைச்சிக்காதீங்க.. பட்டென ட்வீட் போட்ட பூஜா ஹெக்டே.. அப்போ அருவா?

சென்னை: சூர்யாவின் அருவா படத்தில் பூஜா ஹெக்டே தான் நாயகி என தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பூஜா ஹெக்டே போட்ட ட்வீட் சூர்யா ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.

Recommended Video

Doordarshan Re telecasts Shaktimaan and Ramayana

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

அந்த படம் சரியாக ஓடாத நிலையில், டோலிவுட் பக்கம் வண்டியை கிளப்பிய பூஜா ஹெக்டேவுக்கு வரிசையாக ஹிட் கிடைத்தது.

அருவா

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி தீபாவளிக்கு ரிலீஸ் என அட்டகாசமாக அறிவிப்பு வெளியான அருவா படத்திற்கும் கொரோனா வைரஸ் ஆரம்பத்திலேயே ஆப்பு வைத்து விட்டது. இந்நிலையில், அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடி யார் என்கிற அடுத்த பிரச்சனை ஆரம்பித்துள்ளது.

ராஷ்மிகா? பூஜா ஹெக்டே

ராஷ்மிகா? பூஜா ஹெக்டே

அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அலா வைகுந்தபுறமுலோ படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆன நிலையில், பூஜா ஹெக்டேவுக்கு இந்தியளவில் ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டுள்ளது. கார்த்தியுடன் சுல்தான் படத்தில் ராஷ்மிகா நடித்து வரும் நிலையில், அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷ்மிகாவா? அல்லது பூஜாவா? என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

பூஜா ஹெக்டே மறுப்பு

பூஜா ஹெக்டே மறுப்பு

ராஷ்மிகா மந்தனா இல்லை பூஜா ஹெக்டே தான் சூர்யாவின் அருவா படத்தில் நடிக்கப் போகிறார் என இரண்டு மூன்று நாட்களாக உறுதியான தகவல்கள் என பல செய்திகள் வைரலான நிலையில், அதனை மறுக்கும் விதமாக, ஹலோ ஹலோ.. நீங்களே உங்க இஷ்டத்துக்கு நினைச்சுக்காதீங்க, நான் எந்த தமிழ் படத்திலும் இதுவரை சைன் பண்ணவில்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மீண்டும் தமிழில்

மீண்டும் தமிழில்

2013ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, மீண்டும் இந்த ஆண்டு தமிழில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அது சூர்யா படமா? அல்லது தளபதி 65 படமா? என்பது உறுதியாகவில்லை. இப்போதைக்கு இரண்டு, மூன்று கதைகளை கேட்டு வரும் பூஜா ஹெக்டே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்.

ரசிகர்கள் அப்செட்

ரசிகர்கள் அப்செட்

சூர்யாவுக்கு ஜோடியாக புட்ட பொம்மா புகழ் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்ற செய்தியால் சந்தோஷத்தில் இருந்த சூர்யா ரசிகர்கள், இப்படி பட்டென மறுக்கும் விதமாக பூஜா ஹெக்டே போட்ட ட்வீட்டை பார்த்து விட்டு நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ளனர். சீக்கிரம் சூர்யா படத்துல சைன் பண்ணுமா என்றும் சில ரசிகர்கள் செல்ல மிரட்டல்களையும் விடுத்துள்ளனர்.

பிரபாஸ் 20

பிரபாஸ் 20

அல்லு அர்ஜுன் படத்தை முடித்த கையோடு, பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் அவரது 20வது படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வருகிறார். 1970 காலக்கட்டத்தில் நடக்கும் கிளாசிக் காதல் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது. சமீபத்தில், இந்த படத்திற்காக ஜார்ஜியாவில் ஷூட்டிங் நடத்திய நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்பினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X