பூஜா ஹெக்டே குறித்த விஜய்யின் கமெண்ட்... பூஜாவோட ரியாக்ஷனை பாருங்க!
சென்னை : விஜய் நடிப்பில் உருவாகி வரும் 13ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்திய அளவில் 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷனை சன் பிக்சர்ஸ் சிறப்பான அளவில் செய்து வருகிறது.

நடிகர் விஜய்யின் பீஸ்ட்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படம் நாளைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது. இதற்கென ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

சிறப்பான புரமோஷன்கள்
மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு மிகச்சிறந்த புரமோஷன்களை சன் பிக்சர்ஸ் முடுக்கி விட்டுள்ளது. இந்திய அளவில் 5 மொழிகளில் படம் ரிலீசாகவுள்ள நிலையில் அனைத்து மொழிகளிலும் படத்திற்கான புரமோஷன்கள் சிறப்பான வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரசிகர்கள் ஏமாற்றம்
தமிழில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்வு மிகவும் எதிர்பார்ப்பிற்கு உள்ளானது. ஆனால் அந்த நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஏனென்றால், விஜய் படங்களின் ஆடியோ ரிலீஸ் எப்போதுமே மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும்.

குட்டி ஸ்டோரி சொன்ன விஜய்
ஆனால் விஜய் ரசிகர்களை ஏமாற்றவில்லை. ஆடியோ ரிலீஸ் நிகழ்வை போலவே அவர் சன் டிவியில் பேட்டி கொடுத்து, ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரி சொல்லி அசத்தினார். மேலும் படம் குறித்தும், அரசியல் குறித்தும் பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். சொந்த வாழ்க்கை குறித்தும் அவர் பல கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

ட்விட்டரில் லைவ் சாட்
தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் படத்திற்கான புரமோஷன் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே படம் குறித்து ரசிகர்களிடையே ட்விட்டரில் லைவ் சாட்டில் ஈடுபட்டார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் சிறப்பான வகையில் பதிலளித்தார்.
Recommended Video

விஜய்யின் கமெண்ட்டிற்கு நன்றி
அப்போது சன் டிவி இன்டர்வியூவில் விஜய் பூஜா ஹெக்டே குறித்து பதிவு செய்த கமெண்ட் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய பூஜா ஹெக்டே, விஜய்க்கு உற்சாகத்துடன் நன்றி தெரிவித்துள்ளார். பூஜா மிகவும் புரொபஷனல் மற்றும் அர்ப்பணிப்புடன் வேலை செய்பவர் என்று விஜய் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











