பிரபல நடிகையிடம் அந்த மாதிரி போட்டோ கேட்ட ரசிகர்.. அதிரடியாக போஸ்ட் செய்த ஹீரோயின்!
சென்னை: நிர்வாணப் புகைப்படம் கேட்ட ரசிகர்களுக்கு வித்தியாசமான புகைப்படத்தை போஸ்ட் செய்து பதிலடி கொடுத்துள்ளார், பிரபல நடிகை.
நடிகை பூஜா ஹெக்டே, தெலுங்கு, இந்தியில் முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில், ஜீவாவின் முகமூடி படம் மூலம் அறிமுகமானவர் இவர். பிறகு தமிழில் அதிக வாய்ப்பு இல்லை.

புட்ட பொம்மா
பாலிவுட்டில் அக்ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் நடித்து அசத்திய பூஜா ஹெக்டே, இந்த ஆண்டு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அலா வைகுந்தபுரம்லோ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதில் இடம்பெற்ற 'புட்ட பொம்மா' பாடல் யூடியூப்பில் சாதனைப் படைத்தது.

அந்த ரொமான்ஸ்
இப்போது பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே இந்தியில், சல்மான் கான் ஜோடியாக, கபி ஈத் கபி தீவாளி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ரன்வீர் சிங் ஜோடியாக, ரோகித் ஷெட்டி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சிர்கஸ் என்று டைட்டில் வைத்துள்ளனர்.

மோஸ்ட் எலிஜிபிள்
இதில் இன்னொரு ஹீரோயினாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா, அகில் அக்கினேனி ஜோடியாக மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையை கிளப்பியது.

தொப்புள் சர்ச்சை
தென்னிந்திய ரசிகர்கள், தொப்புள் பகுதியை பார்த்தாலே பரவசம் ஆகிவிடுகிறார்கள். அவர் என் கால்களை பார்ப்பதை விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். இது சர்ச்சையானதை அடுத்து அவர் விளக்கம் அளித்திருந்தார். தென்னிந்திய ரசிகர்களை தான் தவறாக ஏதும் குறிப்பிடவில்லை என்று கூறியிருந்தார்.

மேக்கப் இல்லாத
இந்நிலையில், சமீபத்தில் சில புகைப்படங்களை பதிவு செய்து சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்கள் அவரிடம் கேட்ட பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்தார். அவரிடம் பிகினி புகைப்படங்கள், மேக்கப் இல்லாத புகைப்படங்கள், செல்ஃபி என பல புகைப்படங்களை கேட்டனர்.

நிர்வாணப் புகைப்படம்
அதை போஸ்ட் செய்த நடிகை பூஜாவிடம் ஒரு நெட்டிசன் நிர்வாணப் புகைப்படம் கேட்டிருந்தார். இதனால், மற்ற ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அந்த ரசிகரை கண்டபடி திட்டினார். ஆனால், கூல் பூஜா, அதற்கும் ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்தார்.

வெற்றுக் கால்கள்
அதாவது தனது கால்களின் புகைப்படத்தை போஸ்ட் செய்துவிட்டு, nange pao என்று குறிப்பிட்டு, அந்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்திருந்தார். இதற்கு, வெற்றுக் கால்கள் என்று அர்த்தமாம். இதையடுத்து அவருடைய காமெடி சென்சை நெட்டிசன்ஸ் பாராட்டி வருகின்றனர். கடைசியாக அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











