கிராமத்துப் பெண், மார்டர்ன் மனுஷி.. பிரபாஸ் படத்தில் 2 வேடங்களில் நடிக்கிறாராமே இந்த ஹீரோயின்!

By

சென்னை: பிரபாஸ் நடிக்கும் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் பிரபாஸ், ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி'யில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

இதையடுத்து அவர் நடிக்கும் படங்கள், பான் இந்தியா முறையில் உருவாகி வருகிறது.

எதிர்பார்த்த வெற்றி

எதிர்பார்த்த வெற்றி

அதாவது, தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாள மொழிகளில் உருவாகி வருகிறது. பாகுபலிக்குப் பிறகு அவர் நடித்த சாஹோ படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியானது. இது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.கே. ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார்.

காதல் கதை

காதல் கதை

இதில் பூஜா ஹெக்டே ஹீரோயின். பீரியட் காதல் கதையான இது, ஐரோப்பிய பின்னணியில் நடக்கிறது. இதன் ஷூட்டிங், கொரோனாவுக்கு முன்புவரை ஜார்ஜியாவில் நடந்து வந்தது. பெரும்பாலான ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் சில நாட்கள் மட்டுமே இதன் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். இவர், தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில், ஜீவா ஜோடியாக நடித்தவர். பிறகு தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை. தெலுங்கில் கவனம் செலுத்திய பூஜா ஹெக்டே, சில ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து அங்கு டாப் ஹீரோ படங்களில் நடித்து வருகிறார்.

மாடர்ன் பெண்

மாடர்ன் பெண்

ராதே ஸ்யாம் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, 2 கேரக்டர்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு கேரக்டரில் கிராமத்து பெண்ணாகவும் மற்றொரு கேரக்டரில் மாடர்ன் பெண்ணாகவும் நடிக்கிறாராம். ஆனால், இதுபற்றி அதிகாரபூர்வமாக தகவல் ஏதும் இல்லை. இந்தப் படத்தை அடுத்து ஹீரோ பிரபாஸ், ஆதிபுருஷ் மற்றும் நாக் அஸ்வின் இயக்கும் படங்களில் நடிக்கிறார்.

ராமாயணக் காவியம்

ராமாயணக் காவியம்

ஆதிபுருஷ் படத்தை இந்திப் பட இயக்குனர் ஓம்ராவத் இயக்குகிறார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டி ருந்தனர். ராமாயணக் காவியத்தின் ஒரு பகுதி கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.

சல்மான் கான்

சல்மான் கான்

நடிகை பூஜா ஹெக்டே, இப்போது தெலுங்கில் அகில் அக்கினேனி ஜோடியாக மோஸ்ட் எலிஜிபிள் பேஜிலர் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இந்தியில் சல்மான் கான் ஜோடியாக கபி ஈத் கபி தீவாளி என்ற படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் சூர்யாவின் அருவா படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் அதை அவர் மறுத்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X