பீஸ்ட் படத்தின் சூட்டிங் துவக்கம்... ஜூலை 1ல் சென்னை வரும் பூஜா ஹெக்டே

சென்னை : தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வரும் ஜூலையில் துவங்கவுள்ளது.

இதையொட்டி சென்னையில் பிரம்மாண்டமான வகையில் செட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வரும் ஜூலை 1ம் தேதி பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே சென்னை வரவுள்ளார்.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜியார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் படப்பிடிப்பு

சென்னையில் படப்பிடிப்பு

இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளதாக முன்னதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் சூட்டிங் வரும் ஜூலை முதல் வாரத்தில் நடக்கவுள்ளதாக தெரிகிறது. இதையொட்டி நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

பூஜா ஹெக்டே உற்சாகம்

பூஜா ஹெக்டே உற்சாகம்

இருவரும் ஷாப்பிங் மால் ஒன்றில் சந்திக்கும் காட்சிகள் முதல்கட்டமாக படமாக்கப்பட உள்ளன. இந்த படப்பிடிப்பில் முதல் முறையாக பூஜா ஹெக்டே கலந்து கொள்கிறார். இதுகுறித்து அவர் முன்னதாக உற்சாகம் தெரிவித்திருந்தார். மேலும் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து இருவரின் புகைப்படங்களை பதிவிட்ட அவர், இந்த முகங்களை படத்தில் பார்க்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

ஜூலை 1ல் சென்னை வருகை

ஜூலை 1ல் சென்னை வருகை

இந்நிலையில் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக வரும் ஜூலை 1ம் தேதி பூஜா ஹெக்டே சென்னை வரவுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் விரைவில் முடிக்கப்பட்டு வரும் பொங்கல் ரிலீசாக படம் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தலைப்பு வெளியீடு

தலைப்பு வெளியீடு

விஜய் 65 என்று பெயரிடப்பட்டிருந்த இந்த படம் சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி இரண்டு போஸ்டர்கள் மற்றும் படத்தின் தலைப்பு ஆகியவை வெளியிடப்பட்டன. விஜய்யின் பிறந்தநாளை திருவிழாவை போல கொண்டாடிய ரசிகர்களுக்கு இது சிறப்பான விருந்தாக அமைந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X