ரசிகர்களை அப்படி சொல்வதா? விளாசிய நெட்டிசன்ஸ்.. ஓடி வந்து விளக்கம் அளித்த பிரபல ஹீரோயின்!

By

சென்னை: ரசிகர்களின் ரசனையை தவறாக கூறியதாக கூறி, பிரபல நடிகையை நெட்டிசன்ஸ் விளாசியதை அடுத்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே, தெலுங்கு, இந்தியில் முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில், ஜீவாவின் முகமூடி படம் மூலம் அறிமுகமானவர் இவர். பிறகு தமிழில் அதிக வாய்ப்பு இல்லை.

புட்ட பொம்மா

புட்ட பொம்மா

பாலிவுட்டில் அக்‌ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் நடித்து அசத்திய பூஜா ஹெக்டே, இந்த ஆண்டு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அலா வைகுந்தபுரம்லோ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதில் இடம்பெற்ற 'புட்ட பொம்மா' பாடல் யூடியூப்பில் சாதனைப் படைத்தது.

அந்த ரொமான்ஸ்

அந்த ரொமான்ஸ்

இப்போது பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. பிரபாஸ் பிறந்த நாளன்று மோஷன் வீடியோ வெளியிடப்பட்டது. பிரபாஸும் பூஜாவும் ஸ்டைலாக ரயிலில் செல்லும் அந்த ரொமான்ஸ் வீடியோவும் வைரலானது.

கபி ஈத் கபி

கபி ஈத் கபி

இதற்கிடையே இந்தியில், சல்மான் கான் ஜோடியாக, கபி ஈத் கபி தீவாளி என்ற படத்தில் நடித்து வருகிறார், பூஜா ஹெக்டே. இதையடுத்து ரன்வீர் சிங் ஜோடியாக, ரோகித் ஷெட்டி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சிர்கஸ் என்று டைட்டில் வைத்துள்ளனர். இன்னொரு ஹீரோயினாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார்.

தொப்புள் பகுதி

தொப்புள் பகுதி

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள், தொப்புள் பகுதியை பார்த்தாலே பரவசம் ஆகிவிடுகிறார்கள். அவர் என் கால்களை பார்ப்பதை நான் விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். இதையடுத்து தென்னிந்திய ரசிகர்களின் ரசனையை தவறாக சித்திரித்ததாகக் கூறி அவரை விளாசத் தொடங்கினர்.

சொன்ன விஷயங்கள்

சொன்ன விஷயங்கள்

இது சோசியல் மீடியாவில் பரபரப்பானது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. நான் சொன்ன விஷயங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. நான் சொன்ன விஷயங்களை திசைத் திருப்பினாலும் தெலுங்கு ரசிகர்களிடம் எனக்கிருக்கும் அன்பை மாற்ற முடியாது.

கடன்பட்டிருக்கிறேன்

கடன்பட்டிருக்கிறேன்

தெலுங்கு திரையுலகம் எனக்கு முக்கியமானது. இது என் ரசிகர்களுக்கும் தெரியும். தவறான புரிதல்களுக்கு நான் எப்போதும் இடமளிப்பதில்லை. இப்போதும் அப்படித்தான். தெலுங்கு சினிமாவுக்கு நான் எப்போதும் கடன்பட்டிருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X