"அது" ரொம்ப கஷ்டங்க.. என்னால முடியலைப்பா.. அனுபவத்தைப் பகிரும் பூஜா ஹெக்டே!

மும்பை : ஸ்டேன்ட் அப் காமெடியனாக பூஜா ஹெக்டே தனது திறமையை வெளிப்படுத்த போகிறார் என தகவல் வெளியானதும், காமெடி நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க போகிறார் என தகவல் பரவியது. போட்டியாளராக பூஜா பங்கேற்க உள்ளார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் தெலுங்கில் அவர் நடிக்கும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் என்ற படத்தில் விப்ரா என்ற ஸ்டேன்ட் அப் காமெடியன் வேடத்தில் தான் பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த ரொமான்டிக், காமெடி படத்தை பாஸ்கர் எழுதி, இயக்குகிறார்.

 Pooja Hegde: It’s tough to play a stand-up comedian in a movie

இந்த ரோலில் நடிப்பதற்காக கிட்டதட்ட 100 நடிகைகள், மாடல்கள் ஆடிசனில் கலந்து கொண்டார்களாம். ஆனால் கடைசியாக பூஜா தான் இதற்கு சரியாக இருப்பார் என படக்குழு முடிவு செய்துள்ளது. இது பற்றி பூஜாவிடமும் பேசி உள்ளனர்.

பூஜா தற்போது ரோஹித் ஷெட்டியின் சர்க்கஸ், பிரபாசின் ராதே ஷ்யாம் படங்களிலும், வேறு சில இந்தி, தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் காமெடியன் ரோலில் நடிக்க தேர்வாகி இருப்பது பற்றி கூறிய பூஜா, கேமிரா முன்னாடி காமெடியனாக நடிப்பது மிக கடினம்.

பொதுவாக காமெடியன்கள் நகைச்சுவை வேடத்தில் நடிக்க செட்டில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒத்திகை பார்ப்பார்கள். ஆனால் இந்த படத்தில், ஒருவர் ஒரு ஜோக்கை உருவாக்கி, அதற்கு தகுந்தாற் போல் பஞ்ச் வரிகள் வைத்து, ஸ்டேன்ட் அப் காமெடியாக மாற்றி, அதை புரிந்து கொண்டு பேசி நடிப்பது கஷ்டம்.

இது காமெடி ஷோ பற்றி படமில்லை. இந்த படத்திற்காக ஸ்டேன்ட் அப் காமெடி செய்பவர்கள் பலரை சந்தித்து வருகிறேன். அவர்கள் இதற்கு எப்படி தயாராகிறார்கள் என்பதை கற்றுக் கொண்டு வருகிறேன் என்றார்.

மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் படத்தின் வேலைகள் 2019 ம் ஆண்டு ஜுலை மாதம் துவங்கப்பட்டது. பிறகு பெரும்பாலான பகுதிகள் 2020 ஜனவரி மத்தியில் நியூயார்க்கில் படமாக்கப்பட்டது. அதன் பிறகு மார்ச்சில் படத்தின் ஹீரோவான அகிலுக்கு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்புக்கள் நிறுத்தப்பட்டன.

அதன் பிறகு கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு மீண்டும் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மீண்டும் 2020 செப்டம்பர் முதல் துவங்கி, படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X