என்னப்பா நடக்குது இங்க ...பாதுகாக்கப்படும் விஜய் பட தகவல்கள்...ஆர்வத்தில் உளரும் பிரபலங்கள்

சென்னை : கோலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று விஜய் நடிக்கும் பீஸ்ட். விஜய்யின் 65 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்யின் இந்த படத்திற்கும் அனிருத் இசை அமைக்கிறார்.

விஜய் பிறந்தநாளில் ஃபஸ்ட்லுக்

விஜய் பிறந்தநாளில் ஃபஸ்ட்லுக்

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு, ஏப்ரல் மாதம் சென்னை பெருங்குடியில் உள்ள சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் பூஜையுடன் துவங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்கும் போதே விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட்லுக்கை படக்குழு வெளியிட்டது.

ஷுட்டிங் செட் ஃபோட்டோ பகிர்ந்த பூஜா

ஷுட்டிங் செட் ஃபோட்டோ பகிர்ந்த பூஜா

இந்நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பீஸ்ட் செட்டில் எடுக்கப்பட்ட கேமிராவிற்கு பின்னால் இருக்கும் ஃபோட்டோக்களை பூஜா ஹெக்டே சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். சென்னையில் இந்த செட்டில் தான் இன்று மூன்றாம் கட்ட ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூறி சில ஃபோட்டோக்களை பகிர்ந்தார்.

பதறியடித்து நீக்கிய பூஜா

பதறியடித்து நீக்கிய பூஜா

ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சிறிது நேரத்திலேயே இந்த ஃபோட்டோக்களை நீக்கி விட்டார் பூஜா. ஆனால் அதற்குள் ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அந்த ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. எதற்காக இந்த ஃபோட்டோக்களை அவர் பதிவிட்டார், என்ன காரணத்திற்காக நீக்கினார் என தெரியவில்லை.

கிரிஷும் உளறிட்டாரே

கிரிஷும் உளறிட்டாரே

சமீபத்தில் பாடகர் கிரிஷும் தெலுங்கு டைரக்டர் வம்சிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகையில், அடுத்த படத்தை விஜய் அண்ணாவை வைத்து இயக்க போவதற்கு வாழ்த்து என குறிப்பிட்டார். இதனால் விஜய்யின் அடுத்த படம், நேரடியாக தெலுங்கில் தயாராக உள்ளது. அதனை வம்சி இயக்க உள்ளார் என்ற தகவல் பரவியது. அவரும் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே தனது பதிவை அகற்றினார்.

பாதுகாக்கப்படும் பீஸ்ட் தகவல்கள்

பாதுகாக்கப்படும் பீஸ்ட் தகவல்கள்

இதற்கு முன் விஜய் நடித்த மாஸ்டர், சர்க்கார், பிகில் உள்ளிட்ட படங்களின் ஷுட்டிங் நடந்து கொண்டிருந்த போது மிகுந்த கவனத்துடன் இருந்தும் சில ஃபோட்டோக்கள், வீடியோக்கள் கசிந்து விட்டன. ஆனால் அது போல் பீஸ்ட் படத்தில் எதுவும் நடந்து விடக் கூடாது என படக்குழு மிகுந்த எச்சரிக்கையாக பீஸ்ட் படம் பற்றிய தகவல்களை பாதுகாத்து வருகிறது.

ஆர்வக் கோளாறில் உளறும் பிரபலங்கள்

ஆர்வக் கோளாறில் உளறும் பிரபலங்கள்

இப்படி இருக்கையில் சென்னையில் போடப்பட்டுள்ள பீஸ்ட் செட் ஃபோட்டோக்களை பூஜா பகிர்ந்ததை யாராவது சுட்டிக் காட்டியதால், உடனடியாக அவர் தனது பதிவை நீக்கினாரா என தெரியவில்லை. விஜய் படம் பற்றிய தகவல்கள் எவ்வளவு ரகசியமாக பாதுகாக்கப்பட்டாலும் பிரபலங்கள் சிலரே ஆர்வக் கோளாறில் உளறி விடுகின்றனர்.

ரஷ்யா பறக்கும் பீஸ்ட் டீம்

ரஷ்யா பறக்கும் பீஸ்ட் டீம்

சென்னையில் நடக்கும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு, செப்டம்பர் மாதம் பீஸ்ட் படக்குழு ரஷ்யா புறப்பட்டு செல்ல உள்ளது. அங்கு முக்கியமான சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாம். 2021 ம் ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் படத்தை வெளியிட்டது போல் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு பீஸ்ட் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X