செதுக்கி வெச்ச சிலையாக சேலையில் மனதை கொள்ளை கொள்ளும் பூஜா ஹெக்டே!
ஹைதராபாத் : நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கில் ராதே ஷ்யாம், ஆச்சார்யா,மோஸ்ட் எலிஜபல் பேச்சுலர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்தியிலும் பல படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக இருக்கும் பூஜா ஹெக்டே செதுக்கி வெச்ச சிலையாக சேலையில் கொள்ளை அழகில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையதளத்தை தாறுமாறாக தாக்கி வருகிறது.

வாய்ப்புகள் கிடைக்கவில்லை
மிஸ்கின் இயக்கத்தில் 2012ல் வெளியான முகமூடி தமிழில் வெளியான முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். இதில் ஜீவா ஹீரோவாக நடித்திருக்க பூஜா ஹெக்டே முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்பதால் பூஜாவுக்கு அடுத்தடுத்து தமிழ் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

கியூட்டான டான்ஸில்
எனவே ஹிந்தி மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த பூஜா ஹெக்டே புட்டபொம்மா என்ற ஒரே ஒரு பாடலின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுண்டபுரம்லோ படத்தில் செம கியூட்டான நடிப்பை வெளிப்படுத்தி டான்ஸில் பட்டையைக் கிளப்பிய பூஜா ஹெக்டே இப்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட்
தெலுங்கில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இப்பொழுது சிரஞ்சீவியின் ஆச்சார்யா மற்றும் பிரபாஸின் ராதே ஷ்யாம் உள்ளிட்ட ஹை பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். மாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார்.

பாதி முன்னழகு
இவ்வாறு தமிழ் தெலுங்கு இந்தி என படு பிஸியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே இப்பொழுது செதுக்கி வெச்ச சிலையாக சேலையில் கும்முன்னு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை துவம்சம் செய்துள்ளார். ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் முன்னழகு பாதி தெரிய அம்சமாக உட்கார்ந்துகொண்டு மனதை கொள்ளை கொள்ளும் இந்த புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை தாக்கி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











