பாகுபலி 3 படத்துல அவரோட நடிக்கணும்... பூஜா ஹெக்டேவின் தாறுமாறு ஆசை!

ஐதராபாத் : நடிகை பூஜா ஹெக்டே இந்திய அளவில் சிறப்பான நாயகியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் விஜய்யுடன் அவர் நடித்துள்ள பீஸ்ட் படமும் ஏப்ரலில் ரிலீசாகவுள்ளது.

Recommended Video

நடிப்பிற்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் சொன்ன சத்யராஜ் | Radhe Shyam press meet

நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகையாக இருந்து வருகிறார். தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் இவரது நடிப்பில் சமீபத்தில் ராதே ஷ்யாம் படம் பான் இந்தியா படமாக வெளியானது.

ராதே ஷ்யாம் படம்

ராதே ஷ்யாம் படம்

காதலை மையமாக கொண்டு கடந்த 11ம் தேதி வெளியான இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளான நிலையில் அந்த எதிர்பார்ப்பை சரிவர பூர்த்தி செய்யவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்ற ராதே ஷ்யாம், வசூலிலும் சாதனை படைக்கவில்லை. பிரபாசின் முந்தைய படங்களின் வசூலை கூட எட்டவில்லை.

பிரபாசுடன் ஜோடி

பிரபாசுடன் ஜோடி

படத்தில் பிரபாசுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. இவரது நடிப்பு படத்தில் மெச்சும்படியாக அமைந்திருந்தது. படத்தில் மிகவும் அழகாக காட்டப்பட்டிருந்தார் பூஜா ஹெக்டே. இந்நிலையில் இந்தப் படம் குறித்து பேசியுள்ள பூஜா ஹெக்டே, படத்தின் வெற்றி தோல்வி குறித்து எதையும் நாம் தீர்மானிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ராதே ஷ்யாம் குறித்து பூஜா ஹெக்டே

ராதே ஷ்யாம் குறித்து பூஜா ஹெக்டே

சில படங்கள் விமர்சனரீதியாக வெற்றிப் பெறும் ஆனால், வசூலில் சாதிக்காது. அதேபோல சில படங்கள் வசூல்மழையை பொழிந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இது அந்தந்த படங்களை பொருத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகுபலி 3ல் பிரபாசுடன் இணைய விருப்பம்

பாகுபலி 3ல் பிரபாசுடன் இணைய விருப்பம்

இதனிடையே பிரபாசுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த பூஜா ஹெக்டே, சரியான கதை அமைந்தால் அவருடன் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் குறிப்பாக பாகுபலி 3 படம் எடுக்கப்பட்டால் அதில் அவருடன் இணைய விருப்பமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தாறுமாறு ஆட்டம்

தாறுமாறு ஆட்டம்

தமிழில் நடிகர் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் பூஜா. இந்தப் படம் வரும் ஏப்ரலில் கோடைக் கொண்டாட்டமாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விஜய்க்கு இணையாக இந்தப் பாடல்களில் பூஜா ஹெக்டே ஆட்டம் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X