Don't Miss!
- News வேணாம்.. தப்பாக போயிரும்..! வாக்குச் சாவடியில் முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்.. அதிசயித்த மக்கள்..!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சும்மாவா.. 11 மில்லியன் ஆச்சே.. சத்தமே இல்லாமல் சமந்தாவை பின்னுக்குத் தள்ளிய பூஜா ஹெக்டே!
ஹைதராபாத்: நடிகை சமந்தாவை இந்த விஷயத்துல பூஜா ஹெக்டே பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
டோலிவுட்டில் தற்போது, சமந்தாவா? பூஜா ஹெக்டேவா? யார் டாப் என்கிற போட்டி அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், 10 மில்லியனில் இருந்து 11 மில்லியனாக பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.
யாருக்குமே இல்லாம அவருக்கு மட்டும் ஸ்பெஷல் அழைப்பு.. பிரபல ஹீரோவை காதலிக்கிறாரா நிக்கி கல்ராணி?
கோலிவுட் டு பாலிவுட்
ஜீவாவின் முகமூடி படத்தில் நாயகியாக கோலிவுட்டில் அறிமுகமான இவர், டோலிவுட், பாலிவுட் என பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார். பாலிவுட்டில் அக்ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் நடித்து அசத்திய பூஜா ஹெக்டே, இந்த ஆண்டு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அலா வைகுந்த புறமுலோ எனும் பிளாக்பஸ்டர் படத்திலும் நடித்திருந்தார்.
11 மில்லியன் ரசிகர்கள்
இந்த லாக்டவுனில் அல்வா கிண்டுவது, விளக்கு ஏற்றுவது, ஒர்க்கவுட் செய்யும் புகைப்படங்களை போடுவது என ரசிகர்களுடன் மிகவும் நெருக்கமாகி வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே. 10 மில்லியன் ரசிகர்களை கொண்டிருந்த அவர், தற்போது 11 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை அடைந்திருப்பதால், கால்களை தூக்கியபடி 11 என காட்டும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
சமந்தாவை முந்தினார்
டோலிவுட்டில் சமந்தாவா? பூஜா ஹெக்டேவா? யார் டாப் என்ற போட்டி ரசிகர்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 10.8 மில்லியன் ரசிகர்களை கொண்டு முன்னிலையில் இருந்து வந்த சமந்தாவை, சத்தமே இல்லாமல் பூஜா ஹெக்டே தற்போது முந்தியுள்ளார். இந்த விஷயம் அறிந்த பூஜா ஹெக்டே ரசிகர்கள் சமந்தா ரசிகர்களை மீண்டும் வம்பிழுத்து வருகின்றனர்.
பிரபாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் பிரபாஸின் 20வது படமான ராதே ஷ்யாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக்குக்கு கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக, பல பிரபாஸ் ரசிகர்கள், நடிகை பூஜா ஹெக்டேவை பின் தொடர ஆரம்பித்துள்ளனர். அதன் காரணமாகவே தற்போது பூஜாவின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் அதிகரித்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
சமந்தாவும் ரெடி தான்
லாக்டவுன் தொடங்கியதில் இருந்து சமூக வலைதள பக்கம் வராமல் இருந்த நடிகை சமந்தா, சமீப காலமாக மீண்டும் சோஷியல் மீடியா பக்கத்தில் மிகவும் ஆக்டிவாகி வருகிறார். யோகா செய்யும் புகைப்படங்கள், அழகு குறிப்பு, மாமனாருடன் தோட்டக் கலை என கலக்குகிறார். விரைவில் சமந்தாவும் 11 மில்லியனை தொடுவார் என்றே அவரது ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.