ஸ்டுப்பிட் கொரோனாவின் புட்டத்திலேயே எட்டி உதைத்து விட்டேன்.. தளபதி 65 நாயகி பூஜா ஹெக்டே செம ட்வீட்!
சென்னை: நடிகை பூஜா ஹெக்டே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விட்டதாக ட்வீட் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
தளபதி 65 படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ள நடிகை பூஜா ஹெக்டேவுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கொரோனாவில் இருந்து பூரணமாக குணமாகி விட்டேன் என்றும் கொரோனா நெகட்டிவ் ஆகி விட்டதாகவும் பூஜா ஹெக்டே ட்வீட் போட்டுள்ளார்.

பூஜாவுக்கு கொரோனா
முகமூடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே, டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். மீண்டும் தளபதி 65 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ள பூஜா ஹெக்டேவுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை
தளபதி 65 படத்தின் பூஜையில் கலந்து கொள்ளாத நடிகை பூஜா ஹெக்டே, ஜார்ஜியாவில் நடந்த முதல் ஷெட்யூலிலும் கலந்து கொள்ளவில்லை. விரைவில் தளபதி 65 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

புட்டத்திலேயே எட்டி உதைத்தேன்
பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், டோலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டுப்பிட் கொரோனாவின் புட்டத்திலேயே எட்டி உதைத்து விட்டேன் என புட்டபொம்மா நடிகை பதிவிட்டு உள்ளது ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது. மேலும், எனக்கு கொரோனா நெகட்டிவ் ஆகி விட்டது என்றும் செம ஹேப்பியாக பதிவிட்டுள்ளார்.

அந்த மேஜிக் தான்
ரசிகர்களாகிய நீங்கள் செய்த பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்கள் செய்த மேஜிக்கால் தான் இவ்வளவு விரைவாக குணமடைந்துள்ளேன் என்று தனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பூஜா ஹெக்டே. மேலும், அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Recommended Video

எப்போ ஜாயின் பண்றீங்க
கொரோனா நெகட்டிவ் ஆன நிலையில், தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் எப்போ ஜாயின் பண்றீங்க என ஏகப்பட்ட தளபதி ரசிகர்கள் பூஜா ஹெக்டேவிடம் கேட்டு வருகின்றனர். அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட ஷாப்பிங் மால் செட்டில் நடத்தப்பட உள்ள நிலையில், நடிகை பூஜா ஹெக்டே இணைவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











