என்னது ஆப்ரேஷன் செய்தேனா?அதற்கு அவசியமே இல்லை..பூஜா ஹெக்டே விளக்கம்!
சென்னை : நடிகை பூஜா ஹெக்டே காஸ்மடிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக பரவிவரும் சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து பிரபாஸ் உடன் இணைந்து நடித்த ராதே ஷாம் படம் வெளியானது.
ஆனால், இரு படங்களுமே இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை ருசித்து தரவில்லை இதனால், அம்மணி கொஞ்சம் சோகத்தின் தான் இருக்கிறார்.

நடிகை பூஜா ஹெக்டே
பீஸ்ட்,ராதே ஷாம் திரைப்படங்கள் வெளியாகி தெலுங்கு சினிமாவில் பெற்ற நல்ல பெயரை கோலிவுட்டிலும் தங்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று பூஜா ஹெக்டே ரொம்பவும் முயற்சி செய்தார். இதில் பீஸ்ட் திரைப்படம் நல்ல வசூல் பெற்றுத்தந்த போதும் பல நெகட்டிவ் கருத்துக்களை பெற்றது. அதே போல ராதா ஷாம் திரைப்படமும் தோல்வியை சந்தித்தது.

ராசியில்லாத நடிகை
இதையடுத்து, தமிழ் சினிமாவில் இவருக்கு ராசியில்லாத நடிகை என பெயர் வந்துவிட்டதால், சோகத்தில் இருந்த அம்மணி திடீரென வெளிநாட்டுக்கு கிளம்பி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கேயே டேரா போட்டுவிட்டார். அவர் வெளிநாட்டுக்கு சென்றது குறித்து தற்போது ஒரு வதந்தி பரவி வருகிறது.

தேவையில்லாத வதந்தி
ஆதாவது, பூஜா ஹெக்டே காஸ்மடிக் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காகத்தான் வெளிநாடு சென்றதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவியது. இதற்கு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பூஜா ஹெக்டே, நான் எந்தவிதமான ஆப்ரேஷனும் செய்தது இல்லை, அப்படி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை, காரணமே இல்லாமல் ஏன் இப்படி ஒரு வதந்தி பரவுகிறது என்று எனக்கு தெரியவில்லை.

அறுவை சிகிச்சையா?
நான் ஓய்வுக்காகத்தான் ஒரு மாதம் வெளிநாட்டில் இருந்தேன், இப்போது ஐதராபாத்தில் இருக்கிறேன். அடுத்தபடியாக திரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். மற்றபடி எனது உடம்பில் எந்த பகுதியிலும் அறுவை சிகிச்சை செய்யவில்லை. இதுபோன்ற வதந்திகளை எனது ரசிகர்கள் நம்பவேண்டாம் என்றார்.

வரிசையாக படங்கள்
பூஜா ஹெக்டே தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து F3,Cirkus,Kisi Ka Bhai Kisi Ki Jaan, SSMB28 என வரிசையாக பல படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே சினிமாவில் அறிமுகமானதே இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி படத்தில் மூலமாகத்தான் அந்த படம் வரவேற்பை பெறாததால் தெலுங்கு பக்கம் சென்ற இவர் தற்போது அங்கு டாப் நடிகையாக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











