பார்றா... கதையைக் கேட்ட பிறகும் மணிரத்னத்துக்கு நோ சொல்லியிருக்கே இந்த பொண்ணு!!
பூஜா ஹெக்டேன்னு ஒரு நடிகை கொஞ்ச காலத்துக்கு முன் முகமூடி என்ற படத்தில் டவுசர் போட்டுக் கொண்டு வந்து போனார். அந்தப் படத்துக்குப் பிறகு சென்னையை விட்டே போய்விட்டார்.
இப்போது அந்த பூஜா ஹெக்டேதான் ஹ்ரித்திக் ரோஷனுடன் மொகஞ்சதாரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். அசுதோஷ் கோவாரிகர் இயக்கும் படம் இது.

இந்தப் பெண்ணை தன் படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்த மணிரத்னம், தன் உதவியாளர் மூலம் பூஜாவிடம் பேசியுள்ளார். அதுமட்டுமல்ல, கதையையும் சொல்லியுள்ளார்கள். இவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவர் மம்முட்டி மகன் துல்கர் சல்மான்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பூஜா, கதை சூப்பரா இருக்கு. ஆனா என்னால இதில் நடிக்க முடியாது. பாலிவுட்ல பிஸியா இருக்கேன்னு சொல்லி அனுப்பிவிட்டாராம். இத்தனைக்கும் அந்தப் பெண்ணுக்கு அந்த ஒரு படம் தவிர வேறு எந்த வாய்ப்பும் இல்லை!
யானை குழிக்குள்ள விழுந்தா எறும்பு கூட எட்டிப் பார்த்து குசலம் விசாரிக்கும்னு சொல்றது இதைத்தானோ!!


Click it and Unblock the Notifications











