தூக்கிட்டு வந்துட்டாங்க அந்த புட்டபொம்மா செல்லத்த.. தளபதி 65 படத்தின் ஹீரோயின் அவங்களே தான்!

சென்னை: தளபதி 65 படத்தின் ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை சன் பிக்சர்ஸ் தற்போது அறிவித்துள்ளது.

ஏற்கனவே பூஜா ஹெக்டே தான் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது படக்குழு அதனை உறுதி செய்துள்ளனர்.

அலா வைகுந்தபுறமுலோ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டேவின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றுள்ளது.

தளபதி 65 அப்டேட்

தளபதி 65 அப்டேட்

புதன் கிழமை மாலை 5 மணிக்கு தளபதி 65 படத்தின் மெர்சலான அப்டேட் வரவுள்ளது என சன் பிக்சர்ஸ் அறிவித்ததில் இருந்தே விஜய் ரசிகர்கள், எக்கச்சக்க எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது படத்தில் நடிக்கும் ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது.

விஜய்க்கு ஜோடி

ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தளபதி 65 படத்தில் நடிக்கப் போவது பூஜா ஹெக்டா தான் என்கிற அதிகாரப்பூர்வ அப்டேட்டை சன் பிக்சர்ஸ் தற்போது அறிவித்துள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்த பூஜா, பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

அழகான கால்கள்

அழகான கால்கள்

கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுறமுலோ படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் 200 மில்லியன் வியூக்களை தாண்டி யூடியூபில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்தியா முழுக்க அந்த பாடல் பிரபலமானது. இந்நிலையில், அழகான கால்களுக்கு சொந்தக்காரியான பூஜா ஹெக்டேவை விஜய்க்கு ஜோடியாக்கி உள்ளார் இயக்குநர் நெல்சன்.

பிரபாஸ் படத்தில்

பிரபாஸ் படத்தில்

அல்லு அர்ஜுன் படத்தை தொடர்ந்து பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்ததாக தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி இருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X