நடிகை போடும் 'ஜாலி' கன்டிஷன்: விழுந்து விழுந்து சிரிக்கும் இயக்குநர்கள்
ஹைதராபாத்:தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் பூஜா ஹெக்டே ஒரு வித்தியாசமான கன்டிஷன் போடுகிறார்.
ஜீவாவின் முகமூடி படம் மூலம் நடிகையானவர் மும்பையை சேர்ந்த பூஜா ஹெக்டே. அதன் பிறகு அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அவர் தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தெலுங்கில் வால்மிகி என்கிற படத்திலும், இந்தியில் ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் பூஜா.

இயக்குநர்கள்
தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் ஒரேயொரு கன்டிஷன் போடுகிறாராம் பூஜா ஹெக்டே. நடிகைகள் ஏதேதோ கன்டிஷன் போடும் நிலையில் பூஜா போடும் கன்டிஷனை கேட்டு இயக்குநர்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. காரணம் அவரின் கன்டிஷன் அப்படி.

கன்டிஷன்
பூஜா இயக்குநர்களிடம் கூறுவதாவது, நான் ரொம்ப ஜாலியான ஆள். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாலும் ஜாலியாக இருப்பேன். அதை பார்த்து என்னை தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. என்னடா இந்த பொண்ணு சீரியஸ்னஸ் தெரியாமல் ஜாலியாக இருக்கு என்று பேசக் கூடாது. மேலும் இயக்குநரும், தயாரிப்பாளரும் சிடுசிடு என்று இல்லாமல் ஜாலியாக இருக்க வேண்டும். சீரியஸாக இருப்பவர்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்பவில்லை என்கிறாராம். பூஜாவின் கன்டிஷன் பல இயக்குநர்களை சிரிக்க வைத்தாலும் சிலரோ ஆமா, இந்தம்மாவுக்காக நாம் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டுமா என்று அலுத்துக் கொள்கிறார்கள்.

ஜிகர்தண்டா ரீமேக்
நம்ம சித்தார்த் நடித்த ஜிகர்தண்டா படம் தெலுங்கில் வால்மிகி என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ஹரிஷ் ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் வருண் தேஜ் ஹீரோவாக நடிக்கிறார். லக்ஷ்மி மேனனின் கதாபாத்திரத்தில் பூஜா நடிக்கிறார். வால்மிகி படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் மூலம் அதர்வா டோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.
பூஜா
பூஜா படப்பிடிப்பில் கலந்து கொண்டதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார் ஹரிஷ் சங்கர். அந்த புகைப்படத்தில் பூஜாவின் முதுகு தான் தெரிகிறது. முன்னதாக பூஜா மகேஷ் பாபுவுடன் சேர்ந்து நடித்த மகர்ஷி படம் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











