கொரோனாவை கண்டு பயப்படாத பூஜா ஹெக்டே.. ஜார்ஜியாவில் இருந்து பேக்கப்.. என்ன ஆனது ஷூட்டிங்?

ஜார்ஜியா: பிரபாஸ் 20 படத்தின் ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா சென்ற நடிகை பூஜா ஹெக்டே, அங்கிருந்து கிளம்பும் முன் எடுத்த அழகான புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Yashika Spa Time Ultra Glamour Photo | Namitha Blasts on Netizen | Pooja Hedge Post

கொரோனா வைரஸ் காரணமாக ஹாலிவுட் முதல் கோலிவுட் ஷூட்டிங் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்க்கை மாட்டிக் கொண்டு பிரபாஸ் 20 படக்குழு ஜார்ஜியா புறப்பட்டது.

நடிகை பூஜா ஹெக்டே மாஸ்க்கை அணிந்துக் கொண்டு விமான நிலையத்தில் காத்திருந்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி வைரலாகின.

ரொம்ப தைரியம்

ரொம்ப தைரியம்

மாஸ்க் இருக்க பயமேன் என்கிற ரீதியில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட படக்குழு, இந்த கொரோனா ரணகளத்திலும், குதூகலமாக ஜார்ஜியாவில் பாடல் ஒன்றை ஷூட் செய்ய ஒரு சின்ன படக்குழுவுடன் ஜார்ஜியா பறந்தனர். நடிகர் பிரபாஸ், நடிகை பூஜா ஹெக்டே இவ்வளவு தைரியமாக வெளிநாட்டு படப்பிடிப்புக்கு சென்றுள்ளது டோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

வசூல் வேட்டை

வசூல் வேட்டை

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பில் வெளிவந்த அலா வைகுந்தபுறமுலோ டோலிவுட்டில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. அந்த படத்திற்கு பிறகு நடிகை பூஜா ஹெக்டே, பிரபாஸுக்கு ஜோடியாக பிரபாஸ் 20 படத்தில் நடித்து வருகிறார். மேலும், நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படத்திலும் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

என்ன ஆனது ஷூட்டிங்?

என்ன ஆனது ஷூட்டிங்?

கொரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், உடனடியாக இந்தியாவுக்கு திரும்பி வரும் கட்டாயத்திற்கு, பிரபாஸ் 20 படக்குழுவினரும் தள்ளப்பட்டனர். ஆனால், நடிகர்கள் மற்றும் நடன இயக்குநர்களின் ஒத்துழைப்பால், மூன்றே நாட்களில் ஷூட்டிங் நிறைவு பெற்றதாக இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் ட்வீட் போட்டிருக்கிறார்.

என்ன டைட்டில்?

என்ன டைட்டில்?

ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் பிரபாஸ் 20 படத்திற்கு ஜான் என்ற டைட்டில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. 1970களில் நடக்கும் காதல் காவியமாக இந்த படம் உருவாகி வருவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

ஜார்ஜியாவில் இருந்து கிளம்புவதற்கு முன்னாதாக, பூஜா ஹெக்டே பனி படர்ந்த அந்த இடத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும், இது பாதுகாப்பாக இருக்க வேண்டிய நேரம், அனைவரும் முடிந்த வரை சுத்தமாக இருங்கள், பிரச்சனைகள் ஓய்ந்த பிறகு மீண்டும் சந்திக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X