twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவி‘… இப்படித்தான் பயன்படுத்தனும்… சொல்லித்தரும் பூஜா ஹெக்டே !

    |

    சென்னை : தளபதி65 பட நாயகி பூஜா ஹெக்டே பல்ஸ் ஆக்ஸி மீட்டர் பயன்படுத்தும் முறை குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்க இந்த வீடியோக பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

    மன்னிக்கவே முடியாது.. மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் மரணிக்கும் அவலம்.. பிரபல நடிகை விளாசல்!மன்னிக்கவே முடியாது.. மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் மரணிக்கும் அவலம்.. பிரபல நடிகை விளாசல்!

    பூஜா ஹெக்டே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டுள்ளார்.

    முதல் படம்

    முதல் படம்

    தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'முகமூடி' இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இது தான் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல் திரைப்படம்

    பல மொழிகளில் பிஸி

    பல மொழிகளில் பிஸி

    இப்படம் வெற்றிப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு வரவில்லை. மேலும், இவர் தெலுங்கில் 'ஒக்க லைலா கோஷம்' என்ற படத்தில் நடித்தார். தெலுங்கு திரையுலகுடன் நமது பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த பூஜா ஹெக்டே இந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பூஜா சமீபத்தில் அல்லு அர்ஜுனாவுடன் இவர் இணைந்து நடித்த 'அல வைகுந்தபுரமுலோ' என்ற தெலுங்கு படம் வெளிவந்து மெகா ஹிட்டானது.

    பயன்படுத்தும் முறை

    இவர் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இதன் பாடல் காட்சிகள் மற்றும் டூயட் காட்சிகள் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பூஜா ஹெக்டே தற்போது மீண்டுள்ளார். இந்நிலையில் பூஜா ஹெக்டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பல்ஸ் ஆக்ஸிமீட்டரைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி முறையைப் பகிர்ந்துள்ளார், இது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களால் கற்பிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

    Recommended Video

    Thalapathy 65 படத்தின் பிரம்மாண்ட Set in Chennai | Thalapathy Vijay, Nelson | Filmibeat Tamil
    உதவியாக இருந்தது

    உதவியாக இருந்தது

    இந்த வீடியோ, உங்களுக்கு மிகவும் உதவும் என்று நம்புகிறேன்?? நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்த போது, ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்க இது பெரும் உதவியாக இருந்தது என்று பூஜா ஹெக்டே கூறியுள்ளார். மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

    English summary
    Pooja Hegde shared video,How To Use 'Pulse Oximeter'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X