பீஸ்ட் படத்தோட போஸ்டரை வெளியிட்ட பூஜா ஹெக்டே... ஆனா அதுல ஒரு ட்விஸ்ட்
மும்பை : தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
படத்தின் சூட்டிங் ஜூலை மாதத்தில் துவங்கவுள்ள நிலையில், படத்தின் நாயகி பூஜா ஹெக்டே வரும் 1ம் தேதி சென்னை வரவுள்ளார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பீஸ்ட் படம்
தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் 65வது படம் பீஸ்ட். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே. படத்தின் முதல்கட்ட சூட்டிங் ஜியார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஜூலை மாதத்தில் துவங்கவுள்ளது.

ஜூலையில் துவக்கம்
இந்த சூட்டிங்கில் பூஜா ஹெக்டேவும் பங்கேற்கவுள்ளார். இதையொட்டி வரும் ஜூலை 1ம் தேதி அவர் சென்னை வரவுள்ளார். இந்த படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரமாண்டமான ஷாப்பிங் மால் செட் போடப்பட்டு வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

விஜய் ரசிகர்கள் உற்சாகம்
இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தளபதி 65 என்று பெயரிடப்பட்டிருந்த பீஸ்ட் படத்தின் தலைப்பு மற்றும் 2 போஸ்டர்கள் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

பூஜா பகிர்வு
இதனிடையே, ரசிகர்கள் பல்வேறு போஸ்டர்களை உருவாக்கி வருகின்றனர். அதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்துள்ள போஸ்டரை ரசிகர் ஒருவர் டிசைன் செய்துள்ளார். இந்த போஸ்டரை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











