வழிகிறது வியர்வை.. ஆனாலும் மகிழ்ச்சிதான்.. வைரலாகும் பிரபல ஹீரோயினின் அசத்தல் யோகா போட்டோஸ்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள யோகா போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில், ஜீவா ஜோடியாக நடித்தவர், பூஜா ஹெக்டே. பிறகு தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை.
தெலுங்கில் கவனம் செலுத்திய பூஜா ஹெக்டே, சில ஹிட் படங்களில் நடித்துள்ளார். அங்கு தொடர்ந்து நடித்து வருகிறார்.

விஜய் ஹீரோயின்
இதனால், டாப் ஹீரோக்கள் ஜோடியாக இப்போது நடித்து வருகிறார். தமிழில் சூர்யாவின் அருவா படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டதை சமீபத்தில் மறுத்திருந்தார். தமிழில் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறியிருந்தார். இந்தியில், சல்மான் கான் ஜோடியாக, கபி ஈத் கபி தீவாளி என்ற படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுனால் இதன் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

பீரியட் படம்
பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் என்ற பிரமாண்ட படத்தில், அவர் ஜோடியாக நடித்து வருகிறார். இது பீரியட் படமாகும். கே கே ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதன் படப்பிடிப்புக்காக, லாக்டவுனுக்கு முன் நடிகை பூஜா, ஜார்ஜியா சென்று வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்கள்
லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் இல்லாததால், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் பூஜா ஹெக்டேவும் ஒருவர். அடிக்கடி, தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதில் வெளியிட்டு வருவதை வழக்கமாக செய்து வருகிறார். இதைப் பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் அவர் பக்கங்களுக்கு வருவது வழக்கம்.

வியர்வை வழிகிறது
அவர் இப்போது தனது வீட்டில் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஒரு புகைப்படத்தில் தரையில் படுத்தபடி இருக்கிறார். இதற்கான கேப்ஷனில், 'சிறந்த யோகா வகுப்புக்குப் பின் வந்த சோர்வு இது.. வியர்வை வழிகிறது, ஆனால் மகிழ்ச்சியாக உணர்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். இதை லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

குயின் எப்பவும் குயின்
நீங்கள் நடிகை மட்டுமல்ல, லட்சக்கணக்கானவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறீர்கள், வாழ்த்துகள் என்று சிலர் கூறியுள்ளனர். எப்பவும் ஃபிட்டாக இருங்க, வலிமையா இருங்க என்று சில நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். குயின் எப்பவும் குயின்தான். நான் கொரோனாவுல பாதிக்கப்பட்டிருக்கேன். உங்க போஸ்ட்டை ரசித்துக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து இப்படி போட்டோஸ் போடுங்க என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

ராதே ஷ்யாம் பர்ஸ்ட் லுக்
சிலர், பிரபாஸூடன் அவர் நடித்துள்ள ராதே ஷ்யாம் பட பர்ஸ்ட் லுக் சூப்பர் என்றும் படத்துக்காக ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். நீங்க ஏன் உங்க இன்ஸ்டாவுல இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடலை? என்று ஒருவர் கேட்டுள்ளார். சிலர் அவர் அழகை கவிதையாக வர்ணித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











