Pooja Hegde: பாருடா.. பூஜா ஹெக்டேவுக்குள்ள இப்படியொரு திறமையா.. ஃபெடரருக்கே டெடிகேட் பண்றாரு!
சென்னை: புதிய பட வாய்ப்புகள் மொத்தமாக மறுக்கப்பட்டு வரும் நிலையில், அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது ஓய்வு நேரத்தை மாலத்தீவில் கழித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே டென்னிஸ் விளையாடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.

மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் ஒப்பந்தமான பூஜா ஹெக்டே அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக எந்த ஒரு பெரிய படத்திலும் கமிட் ஆகாமல் உள்ளார்.
சமீபத்தில் தனது 33-வது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடி வரும் பூஜா ஹெக்டே லேட்டஸ்ட்டாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
மாலத்தீவில் பூஜா ஹெக்டே: தனது பிறந்தநாளை முன்னிட்டு மாலத்தீவுக்கு சென்ற நடிகை பூஜா ஹெக்டே அங்கே கவர்ச்சி உடைகளில் காத்து வாங்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இளைஞர்களை சூடாக்கி வருகிறார். சைக்கிள் ஓட்டுவது, சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடை திரியை போஸ் கொடுப்பது என உசுப்பேற்றி வருகிறார்.
டென்னிஸ் விளையாட்டு: மேலும் தற்போது, தீவு ரிசார்ட்டில் டென்னிஸ் விளையாடும் புகைப்படங்களை ஷேர் செய்து இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். பச்சை நிற உடையில் ஹாலிவுட் நடிகை போல அப்படி ஒரு லுக்கில் பூஜா ஹெக்டே போஸ் கொடுத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.
ஃபெடரருக்கு சமர்ப்பணம்: உலக அளவில் பிரபலமான டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரருக்காக என டென்னிஸ் விளையாடும் புகைப்படங்களை பதிவிட்டு அதற்கு கேப்ஷன் போட்டு கிறங்கடித்துள்ளார்.

பூஜா ஹெக்டேவின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமால் 2.5 கோடி ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள பூஜா ஹெக்டே ஒரு படத்துக்கு ராஷ்மிகா மந்தனா வைப் போல 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாகவும் கூறுகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளில் விஜய், பிரபாஸ், சல்மான் கான், ராம்சரண் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மாஸ் காட்டிய பூஜா ஹெக்டே 20 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதித்துள்ளார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











