படமாகும் ஷேக்ஸ்பியர் நாடகம்.. பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் ஜோடியான மிஷ்கின் ஹீரோயின்!
சென்னை: இந்திப் படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், நடிகை பூஹா ஹெக்டே.
இதில் ஜீவா ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை.

யூடியூப் சாதனை
தெலுங்கில் கவனம் செலுத்திய பூஜா ஹெக்டே, சில ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனால், டாப் ஹீரோக்கள் ஜோடியாக இப்போது அங்கு நடித்து வருகிறார். கடைசியாக அல்லு அர்ஜுன் ஜோடியாக அலா வைகுந்தபுரம்லோ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதில் இடம்பெற்ற 'புட்ட பொம்மா' பாடல் யூடியூப்பில் சாதனைப் படைத்தது.

ராதே ஷ்யாம்
இப்போது பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதற்கிடையே, இந்தியில், சல்மான் கான் ஜோடியாக, கபி ஈத் கபி தீவாளி என்ற படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுனால் இதன் ஷூட்டிங் தடைப்பட்டுள்ளது.

ரன்வீரின் சிர்கஸ்
இந்நிலையில், மீண்டும் ஒரு இந்தி படத்தில் அவர் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் ஜோடியாக அவர் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ரோகித் ஷெட்டி இயக்குகிறார். படத்துக்கு சிர்கஸ் என்று டைட்டில் வைத்துள்ளனர். இன்னொரு ஹீரோயினாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார்.

மூன்றாவது முறையாக
ரன்வீர் சிங்கும் ரோகித் ஷெட்டியும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இதற்கு முன், சிம்பா, சூரியவன்ஷி படங்களில் இணைந்திருந்தனர். ஷேக்ஸ்பியரின் த காமெடி ஆஃப் எர்ரர்ஸ் என்ற நாடகத்தைத் தழுவி இந்தப் படம் எடுக்கப் படுகிறது. ஊட்டி, கோவாவில் இதன் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications











