பூஜா கம்மிங் ஒத்து.. தளபதியுடன் ஆடத் தயாராகும் புட்டபொம்மா.. டான்ஸ் மாஸ்டர் யாரு தெரியுமா?

சென்னை: தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வரும் ஜூலை 1 முதல் சென்னையில் துவங்குகிறது.

மொத்தம் 6 நாட்கள் பாடல் காட்சி ஒன்றை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதற்கான நடன ரிஹர்சலில் நடிகை பூஜா ஹெக்டே கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

பீஸ்ட் படப்பிடிப்பு

பீஸ்ட் படப்பிடிப்பு

நடிகர் விஜய்யின் 65வது படத்திற்கு பீஸ்ட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளார்.

தளபதியுடன் டான்ஸ்

தளபதியுடன் டான்ஸ்

நடிகர் விஜய் உடன் நடனமாட எந்த ஹீரோயினுக்குத் தான் பிடிக்காது. அல்லு அர்ஜுன் உடன் புட்டபொம்மா பாடலுக்கு நடனமாடி உலகளவில் வைரலான பூஜா ஹெக்டே அடுத்து நம்ம வாத்தியோட டான்ஸ் ஆட ரிஹர்சல் செய்து வரும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

பூஜா கம்மிங் ஒத்தே

பூஜா கம்மிங் ஒத்தே

ஸ்ட்ரேஞ்ச் திங்க்ஸ் என எழுதியுள்ள ஆஷ் கலர் டி-சர்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு ஒரு காலை தூக்கி மடக்கியபடி பூஜா ஹெக்டே நடன ரிஹர்சலுக்கு தயாராகும் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. பீஸ்ட் படத்தின் பாடல் ஷூட்டிங் வரும் ஜூலை 1 முதல் சென்னையில் தொடங்கவிருக்கிறது.

சேலையில் செக்ஸியாக

சேலையில் செக்ஸியாக

மஞ்சள் நிற சேலை அணிந்து நேற்று பூஜா ஹெக்டே எங்கேயோ கிளம்பிவிட்டேன் என பதிவிட்டு இருந்தார். அந்த போட்டோக்களும் அவர் வெளியிட்ட வீடியோவும் ரசிகர்களின் பார்வையை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், பீஸ்ட் படத்தின் பாடல் காட்சிக்காக பூஜா ஹெக்டே தயாராகி வருவது தளபதி ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்றுள்ளது.

ஜானி மாஸ்டர்

ஜானி மாஸ்டர்

புட்டபொம்மா பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டரையே பீஸ்ட் படத்தின் பாடலுக்கு டான்ஸ் அமைக்க இயக்குநர் நெல்சன் புக் செய்துள்ளார். தனுஷின் சில் ப்ரோ உள்ளிட்ட பல பாடல்களுக்கும் இவர் நடனம் அமைத்துள்ளார். முதல் பாடலே பூஜா ஹெக்டேவுடன் அமர்க்களமாக தளபதி நடனமாடும் ஷூட்டிங் தான் சென்னையில் நடைபெற உள்ளது ரசிகர்களுக்கு பெரிய அப்டேட்டாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Read more about: pooja hegde beast vijay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X