Pooja Hegde: பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டலா?.. அதிர்ச்சியான ரசிகர்கள்.. நடந்தது என்ன தெரியுமா?
சென்னை: பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு துபாயில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியான நிலையில், சோஷியல் மீடியாவில் அவரது ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். இந்நிலையில், அது வதந்தி என பூஜா ஹெக்டே தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நெல்சன் இயக்கத்தில் நடித்திருந்தார்.
துபாய் நிகழ்ச்சி: நடிகை பூஜா ஹெக்டே துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு மும்பையில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
கொலை மிரட்டல்: அங்கே நடந்த வாக்குவாதம் காரணமாக நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாலிவுட்டின் பிரபல புகைப்படக் கலைஞர் வைரல் பஹாயானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் போட சோஷியல் மீடியாவில் இந்த விவகாரம் தீயாக பற்றிக் கொண்டது.
பூஜா ஹெக்டே தரப்பு மறுப்பு: ஆனால், இது முற்றிலும் பொய்யான செய்தி என்றும் இதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை என்றும் நடிகை பூஜா ஹெக்டேவின் குழுவில் இருக்கும் ஒருவர் செய்தி சேனல் ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பூஜா ஹெக்டே அமைதி: ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை பூஜா ஹெக்டே இதுவரை சோஷியல் மீடியாவில் எந்தவொரு போஸ்ட்டும் போடாமல் அமைதி காத்து வருகிறார். பூஜா ஹெக்டேவுக்கு எதுவும் ஆகக் கூடாது என அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நடிகை பூஜா ஹெக்டே கடைசியாக மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்து அவர் என்ன படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற அறிவிப்பை கூடிய விரைவில் வெளியிடுவார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











