முதல்ல ராஷ்மிகா மந்தனான்னு சொன்னாங்க... சூர்யாவின் 'அருவா' படத்தில் இப்ப இவர்தான் ஹீரோயினாமே!
சென்னை: சூர்யாவின் 'அருவா' படத்தில் அவர் ஜோடியாக பிரபல ஹீரோயின் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
சூரரைப் போற்று படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாகக் கூறப்பட்டது.
இதற்கிடையே சிவா, ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படத்தை இயக்கச் சென்றுவிட்டார். இதனால் சூர்யா, ஹரியுடன் மீண்டும் கைகோர்த்தார்.

அருவா
இந்த படத்துக்கு அருவா என்று டைட்டில் வைத்துள்ளனர். வழக்கமாக ஹரி படங்களில் அரிவாளுக்கு பஞ்சமிருக்காது. அவரது பெரும்பாலான படங்களில் அரிவாள் இடம்பெறும். இந்த நிலையில் இந்தப் படத்துக்கு அவர் அருவா என்று டைட்டில் வைத்ததை ரசிகர்கள் கிண்டலாக வரவேற்றுள்ளனர். இந்தப் படத்துக்கு ஹீரோயினாக, விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன் நடிப்பதாகக் கூறப்பட்டது.

ராஷ்மிகா மந்தனா
மாளவிகா மோகனனை, இயக்குனர் ஹரி நேரில் சந்தித்துப் பேசியதாகவும் படத்தில் அவரது கேரக்டர் பற்றி ஹரி விளக்கியதாகவும் சொல்லப்பட்டது. மாளவிகா, ரஜினியின் பேட்ட படத்திலும் நடித்திருந்தார். பின்னர் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் படக்குழு பேசி வந்ததாகக் கூறப்பட்டது. ராஷ்மிகா, கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து ஹிட்
இந்நிலையில் இப்போது பூஜா ஹெக்டே நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர், தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர். பிறகு தெலுங்கில் சில படங்களில் நடித்த இவர், இந்தியிலும் நடிக்கத் தொடங்கினார். தெலுங்கில் இவர் நடித்த அலா வைகுந்தபுரம்லோ, கத்தலகொண்டா கணேஷ், மகரிஷி ஆகிய படங்கள் தொடர்ந்து ஹிட்டாயின.

ஹவுஸ்புல் 4
இந்தியில் அக்ஷய் குமாருடன் இவர் நடித்த ஹவுஸ்புல் 4 படம் ஹிட்டானதால், இவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அருவா படத்தில் அவர் நடிப்பது உறுதியானால், தமிழில் அவருக்கு அது இரண்டாவது இன்னிங்ஸாக அமையும். இப்போது அவர், பிரபாஸ் ஜோடியாக நடித்து வருகிறார். இது வரலாற்றுப் பின்னணியை கொண்ட காதல் கதை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











