சல்மான்கானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே…குவியும் பட வாய்ப்புகள்
மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவாவின் ஜோடியாக தமிழில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே. தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த இவர் பத்து வருடங்கள் கழித்து தமிழில் விஜய்க்கு கதாநாயகியாக Beast படத்தில் நடித்தார்.
தென்னிந்தியாவில் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் கதாநாயகர்கள் தேடும் நடிகையாக இவர் மாறியுள்ளார்.
பல பெரிய ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே விரைவில் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்.

தொடர் தோல்விப் படங்கள்
நடிகை பூஜா ஹெக்டே நடித்து சமீபத்தில் வெளியான பல படங்கள் தோல்வியைத் தழுவின. நாகார்ஜுனாவின் இரண்டாவது மகன் அகில் உடன் நடித்த Most Eligible bachelor படம் முதல், அதன்பிறகு வெளியான பிரபாஸ் கதாநாயகனாக நடித்த மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ‘ ராதேஷ்யாம் ‘ படம், விஜய்யுடன் நடித்த Beast படம், கடந்த வாரம் ரிலீசான ஆச்சார்யா படம் உட்பட அனைத்து படங்களும் தோல்வி படங்களாகவே அமைந்துள்ளன. ஆனாலும் இவையெல்லாம் பூஜா ஹெக்டே மார்க்கெட்டுக்கு எந்த தடையும் ஆகவில்லை. பூஜா ஹெக்டே அதே வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறார்.

பிக் பட்ஜெட் படங்கள்
தொடர்ந்து 3 தோல்வி படங்கள் தந்தாலும் பூஜா ஹெக்டே மார்க்கெட் உயர்ந்த வண்ணம் உள்ளது. முன்னணி இயக்குனர் மற்றும் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கும் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். நடிகர் பவன் கல்யாணுடன் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இதை இயக்குனர் ஹரி ஷங்கர் இயக்குகிறார்.

சல்மான் கான் படம்
தென்னிந்தியாவின் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார். Farhad sumji இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் இந்த படத்தை Sajid nadiawala தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். இது அஜித்குமார் நடித்து தமிழில் வெற்றி பெற்ற வீரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் என சொல்லப்படுகிறது. வரும் 12ம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது.
Recommended Video

மகிழ்ச்சியில் பூஜா ஹெக்டே
சமீபத்தில் துபாயில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில் சல்மான்கானுடன் நடனம் ஆடிய போது அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பற்றி வியந்து பேசியுள்ளார். " சல்மான் கான் மிகவும் இனிமையானவர். அவருடன் மிகவும் இயல்பாக நம்மால் பேச முடியும். அவருடன் சேர்ந்து நடிப்பது ஒரு பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள் ஆக உணர்கிறேன். வரும் காலங்களில் பல நல்ல படங்களில் நடிக்க உள்ளேன் " என அதில் குறிப்பிட்டுள்ளார். சல்மான்கான் மற்றும் பூஜா ஹெக்டே ஜோடி திரைப்படம் ஆரம்பிக்கும் முன்பே பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











