சீக்கிரமே போய் விட்டாயே சுஷாந்த்.. கதறும் திரையுலகம்.. பூஜா ஹெக்டே முதல் யாஷிகா வரை கண்ணீர் அஞ்சலி!
மும்பை: பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
Recommended Video
பாலிவுட், டோலிவுட், மல்லுவுட், கோலிவுட் என அனைத்து திரையுலக பிரபலங்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐஸ்வர்யா ராஜேஷ் இரங்கல்
பாலிவுட்டின் ஹேண்ட்ஸம் ஆன யங் ஹீரோ உயிரிழந்த செய்தி பல பிரபல ஹீரோயின்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பூஜா ஹெக்டே, திஷா பதானி என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கோலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் ரொம்ப அதிர்ச்சியா இருக்கு, நெஞ்சே உடைந்து விடும் போல இருக்கு, நம்பவே முடியவில்லை சுஷாந்த் சிங்கின் மரணம் என இரங்கல் தெரிவித்துள்ளார்.

மஞ்சிமா மோகன் இரங்கல்
இதயம் நொறுங்கி விட்டதாக உடைந்த இதய எமோஜி மற்றும் சுஷாந்த் சிங்கின் புகைப்படங்களை பதிவிட்டு நடிகை மஞ்சிமா மோகன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மஞ்சிமா மோகனின் ரசிகர்களும் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு கண்ணீர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

அவ்ளோ தான் சார் வாழ்க்கை
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன அழுத்தத்துடன் இருந்து வந்துள்ளார். மேலும், சமீபத்தில் அவரது பெண் மேனேஜர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மர்மம் விலகுவதற்குள் அடுத்ததாக சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை கிளப்பி வருகிறது.

கண்ணீர் விட்ட பூஜா
என்னால சுத்தமா முடியல, ரொம்ப அதிர்ச்சியா இருக்கு, இவ்ளோ சீக்கிரம் போய்ட்டியே சுஷாந்த் என்கிற ரீதியில் கண்ணீர் விட்டு கதறும் எமோஜிக்களை போட்டு நடிகை பூஜா ஹெக்டே தனது அழ்ந்த இரங்கலை பதிவிட்டுள்ளார். வார்த்தையே வரல.. ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

யாஷிகா ஆனந்த் இரங்கல்
ஓ மை கடவுளே.. இதென்ன பேரதிர்ச்சி, என்னால நம்பவே முடியலையே, ஒரு சிறந்த இளம் நடிகரை இந்தியா இழந்து விட்டது என கோலிவுட் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்தும் கண்ணீர் விட்டு கதறும் எமோஜியை போட்டு சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் இரங்கல்
நம்பவே முடியவில்லை.. இப்படியொரு இளமையான திறமையான ஹீரோ உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு வார்த்தை ஏதும் வரவில்லை. மிகவும் பேரதிர்ச்சியாக இருக்கு.. ரொம்ப சீக்கிரமாக உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார். ஆன்மா சாந்தியடையட்டும் என நடிகை கீர்த்தி சுரேஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான் இரங்கல்
என்னை மிகவும் நேசித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத், அவரது எனர்ஜி, புத்துணர்ச்சி, சந்தோஷமான சிரிப்பை கண்டு எப்போதுமே சந்தோஷப்பட்டிருக்கிறேன். இப்படி நம்மை எல்லாம் விட்டுச் செல்வார் என கொஞ்சம் கூட நினைக்கவில்லை. அவரது ஆன்மா சாந்தியடைய அல்லா வழி செய்வார் என வேண்டுகிறேன் என நடிகர் ஷாருக்கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல் ஹீரோ
நடிகை வாணி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில், தனது முதல் பட ஹீரோ என்றும் இவ்வளவு சீக்கிரம் அவர் இறப்பார் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நெஞ்சே வெடித்து விடும் போல இருக்கு, லாட்ஸ் ஆஃப் லவ் என பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து 2013ம் ஆண்டு வெளியான சுத் தேசி ரொமான்ஸ் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











