வேட்டி சட்டை.. நெத்தியில பட்டை.. பூஜா ஹெக்டேவுக்கு விபூதி அடிச்சது யாருன்னு நீங்களே பாருங்க!

ஹைதராபாத்: புட்டபொம்மா பூஜா ஹெக்டேவுக்கு அல்லு அர்ஜுன் விபூதி பூசிவிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.

இந்த ஆண்டு அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுறமுலோ திரைப்படம் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதற்கு முன்னதாகவே துவ்வட ஜகநாதம் படத்தில் இருவரும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

"Please come forward and help. Your donation will transform lives"

மூன்று ஆண்டுகள்

மூன்று ஆண்டுகள்

கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, முரளி ஷர்மா மற்றும் வெண்ணிலா கிஷோர் நடிப்பில் துவ்வட ஜகநாதம் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்திருந்தது. அந்த படம் ரிலீசாகி 3 ஆண்டுகள் ஆனதை நேற்று அல்லு அர்ஜுன் ரசிகர்கள், #3YearsForDJ என்ற ஹாஷ்டேக்கை வெளியிட்டு டிரெண்ட் செய்தனர்.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

அலா வைகுந்தபுறமுலோ படத்திற்கு முன்னதாக இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் வெளியான துவ்வட ஜகநாதம் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக டோலிவுட்டில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நாயகி பூஜா ஹெக்டே, அதற்கு அடுத்து இருவரும் இணைந்து ஆடிய புட்டபொம்மா பாடல் 200 மில்லியனை கடந்து எல்லாம் வரலாறு.

கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

ஆனால், இந்த படம் இந்த ஆண்டு இவர்கள் நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுறமுலோ படம் அளவுக்கு வெற்றியை பெறவில்லை. கலவையான விமர்சனங்களுடன் வெறும் 70 கோடி வசூலுடன் இந்த படத்தின் ஓட்டம் நின்றது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கு இது சூப்பர் ஹிட் படம் தான்.

பூஜாவுக்கு விபூதி

பூஜாவுக்கு விபூதி

துவ்வட ஜகநாதம் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் வேட்டி சட்டையில் செம சூப்பராக நடனம் ஆடியிருப்பார் நடிகை பூஜா ஹெக்டே. அந்த பாடலுக்கு முன்னதாக, அவருக்கு அந்த விபூதி பட்டையை போட்டு விட்டதே நம்ம ஸ்டைலிஷ் சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜுன் தான் என அதன் நினைவுகளை பகிர்ந்து அந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் பூஜா ஹெக்டே.

பூஜா ஹெக்டே ஆசை

பூஜா ஹெக்டே ஆசை

துவ்வட ஜகநாதம் படத்தின் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டத்தை ரசிகர்கள் வெறித்தனமாக வேற லெவலில் கொண்டாடியதை பார்த்த நடிகை பூஜா ஹெக்டே, மீண்டும் இயக்குநர் ஹரிஷ் மற்றும் துவ்வட ஜகநாதம் குழுவுடன் ஒரு படம் பண்ண வேண்டும், அந்த செட்டில் நாங்க செஞ்ச காமெடிகளை தற்போது கூட நினைத்து பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது என்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X