பாலாவுக்கு பிடித்த நாயகி இவர்தானாம்.. வைரலாகும் வீடியோ !

சென்னை : ஒவ்வொரு படங்களின் மூலமும் எதார்த்தமான கதைகளை தத்ரூபமாக பிரதிபலித்து இந்திய அளவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் பாலா.

Recommended Video

பாலாவிற்கு பிடித்த பிரியமானவள் • நான் கடவுள் Pooja

இவர் இயக்கிய அனைத்து படங்களும் இன்றளவும் பலரையும் வியப்பில் ஆழ்த்தி பல விருதுகளை வென்று வருகிறது.

இந்நிலையில் நடிகை சங்கீதா க்ரிஷ் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் பாலா தனக்கு பிடித்த கதாநாயகி இவர் தான் என மனம் திறந்து பேசியுள்ளார்.

படைப்பின் மூலம்

படைப்பின் மூலம்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குனர் பாலா எதார்த்தமான கதைகளையும் எளிமையான திரைப்படங்களையும் தனது படைப்பின் மூலம் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு இவர் இயக்கிய பல படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும் போதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கூட்டி வருவது வழக்கமாகி வருகிறது.

பாலுமகேந்திராவிடம் கற்ற வித்தை

பாலுமகேந்திராவிடம் கற்ற வித்தை

இந்தியாவில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பாலுமகேந்திராவிடம் வித்தையை கற்று உதவி இயக்குநராக பணிபுரிந்த இயக்குனர் பாலா, தனது முதல் படமான சேதுவை பல தடைகளையும் தாண்டி தனது வித்தியாசமான இயக்கத்தின் மூலம் உருவாக்கி தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்.

மிகப்பெரிய திருப்புமுனையாக

மிகப்பெரிய திருப்புமுனையாக

சேது திரைப்படம் வெளியாகி ஓரிரு நாட்கள் குறைந்த அளவிலேயே மக்கள் வந்து படத்தைப் பார்த்த நிலையில் விமர்சனங்களின் வாயிலாக பலரும் இந்தப் படத்தைப் பற்றி அறிந்து பின் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து திரைப்படத்தை பார்த்து தூக்கி வைத்து கொண்டாடினர். இவ்வாறு சற்றும் எதிர்பாராத மிகப் பெரிய வெற்றியை கொடுத்த சேது திரைப்படம் பாலாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

துணை கதாநாயகனாகவும்

துணை கதாநாயகனாகவும்

அதேசமயம் நடிகர் விக்ரம் சேது படத்திற்கு முன்பு பல படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாநாயகனாகவும் நடித்து வந்த நிலையில் அனைத்து படங்களும் தோல்வியை தழுவி வந்தது. இவ்வாறு சந்தித்த பல தோல்விகளுக்குப் பிறகு சேது படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

சூர்யாவிற்கும்

சூர்யாவிற்கும்

இவ்வாறு தனது முதல் படத்திலேயே தனது எதார்த்தமான கதையின் மூலம், சூப்பர் ஹிட் திரைப்படத்தைக் கொடுத்த பாலாவிற்கு தொடர்ந்து ஏறுமுகமாகவே இன்று வரை இருந்து வருகிறது. விக்ரமை தொடர்ந்து இவர் சூர்யாவிற்கும் தனது படங்களின் மூலம் மிகப்பெரிய திருப்புமுனையை அமைத்தவர் இயக்குனர் பாலா.

சுவாரசியமான பதில்

சுவாரசியமான பதில்

தரமான படங்களை இயக்கி இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வந்த பாலா இதுவரை 6 முறை தேசிய விருதுகளை பெற்று தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய பெருமையைத் தேடிக் கொடுத்திருக்கிறார். இவ்வாறிருக்க சமீபத்தில் பல நடிகர் மற்றும் இயக்குனர்களின் பேட்டிகள் சமூக வலைதளங்களில் உலவிக் கொண்டு இருக்கும் நிலையில் அப்படி ஒரு வீடியோவில் பாலா கலந்துகொண்டு நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு சுவாரசியமான பதிலை அளித்துள்ளார்.

எவ்வளவு கடினமானது

எவ்வளவு கடினமானது

நடிகை சங்கீதா கிரிஷ் தொகுத்து வழங்கிய அந்த காரசாரமான நிகழ்ச்சியில் இயக்குனர் பாலாவிடம் பல கேள்விகளை முன்வைத்த சங்கீதா உங்களுக்குப் பிடித்த நடிகை யார் என கேட்க அதற்கு சற்றும் யோசிக்காமல் நடிகை பூஜா எனக் கூறியுள்ளார். அதற்கு காரணம் "நான் கடவுள்" திரைப்படத்தில் பூஜா நடித்திருந்த கதாபாத்திரம் எவ்வளவு கடினமானது என எனக்கு நன்றாகவே தெரியும்.

இக்கட்டான பாதையிலும்

இக்கட்டான பாதையிலும்

அதில் பூஜா கண்களில் அணிந்திருந்த வைய்ட் கலர் லென்ஸ் கண் பார்வையை முற்றிலும் மறைத்த நிலையிலும், மலை உச்சியில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி ஒன்றில் கரணம் தப்பினால் மரணம் என்ற இக்கட்டான பாதையிலும் தான் லெப்ட் ரைட் என சொல்ல சொல்ல அதை கவனமாக கேட்டு தன் உயிரை பணையம் வைத்து அந்த காட்சியில் பூஜா நடித்திருந்தார்.

என் மீது நம்பிக்கை வைத்து

என் மீது நம்பிக்கை வைத்து

நான் சற்று மாற்றி சொல்லியிருந்தாலும் அவரது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் என் மீது நம்பிக்கை வைத்து அந்த காட்சியில் மிகச் சிறப்பாக நடித்து கொடுத்த பூஜா தான் எனக்கு பிடித்த நடிகை என மனம் திறந்துள்ளார் இயக்குனர் பாலா. அந்த நிகழ்ச்சியில் பாலாவின் வார்த்தைகளைக் கேட்ட பூஜா, அந்த இயக்குனர் தன்னை பாராட்டுவதை கேட்டு ஆகாயத்தில் பறந்தவாறு மகிழ்ச்சியில் திளைத்துப் போய் இருந்தாராம்.

More from Filmibeat

Read more about: bala pooja பாலா பூஜா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X