நடிகர் ஶ்ரீகாந்தின் சைக்காலஜி த்ரில்லர்.. 'எக்கோ' படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோயின்!
சென்னை: ஶ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கும் எக்கோ படத்தில் இன்னொரு ஹீரோயினாக இணைந்திருக்கிறார் பூஜா ஜாவேரி.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்து வரும் படம், 'எக்கோ'.
சைக்கலாஜிக்கல் திரில்லர் படமான இதில், ஆசிஷ் வித்யார்த்தி, ஸ்ரீநாத், கும்கி அஸ்வின், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

நவீன் கணேஷ்
வித்யா பிரதீப் நாயகியாக நடிக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜான் பீட்டர் இசை அமைக்கிறார். இன்டுடிவ் சினிமாஸ் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள். அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார்.

துவாரகா நாயகி
கடந்த அக்டோபரில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் மற்றொரு நாயகியாக பூஜா ஜாவேரி நடிக்கிறார். இவர், தெலுங்கில் ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில், விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த துவாரகா படத்தில் நடித்தவர்.

ருக்குமணி வண்டி வருது
பாம் போலேநாத், ரைட் ரைட், எல் 7 ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ள பூஜா ஜாவேரி, தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த தொடரி படத்தில் நடிகையாக நடித்தவர். இப்போது, அதர்வா-வுடன் 'ருக்குமணி வண்டி வருது' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பூஜா ஜாவேரி
அடுத்து 8 உட்ட சில படங்களில் நடித்து வரும் இவர், குஜராத்தி படத்திலும் நடித்து வருகிறார். தற்போது பூஜா ஜாவேரி, ஸ்ரீகாந்த் நடிக்கும் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தின் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











