தலைவன் இருக்கின்றான் படத்தில் அந்த நெருக்கமான நடிகையும் இருக்காராமே? இணையத்தை சூடாக்கும் தேவர்மகன் 2

சென்னை: தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு நெருக்கமான நடிகையும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படம் தலைவன் இருக்கின்றான். தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சுபாஷ்கரனின் லைக்கா புரடெக்ஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

விஜய் சேதுபதி ரோல்

விஜய் சேதுபதி ரோல்

தலைவன் இருக்கின்றான் படம் குறித்து நாள் தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் வைகைப்புயல் வடிவேல் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, நாசருக்கு மகனாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் தீயாய் பரவியது.

Recommended Video

எதிர் காலத்தை கனித்த உலகநாயகன் | Kamal Hassan, Vijay Sethupathi | Marudhanayagam
நடிகைகள்?

நடிகைகள்?

தேவர் மகன் படத்தில் நாசர் வில்லனாக நடித்திருந்தார். அவருக்கு மகனாக விஜய் சேதுபதியுடன் தலைவன் இருக்கின்றான் படம் தொடரும் என தகவல் வெளியானது. இந்நிலையில் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிகைகள் பூஜா குமாரும் ஆண்ட்ரியாவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கமலுடன் நெருக்கம்

கமலுடன் நெருக்கம்

பூஜா குமாரும், ஆண்ட்ரியாவும் ஏற்கனவே கமலுடன் விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். பூஜா குமார் கவுதமிக்கு பிறகு நடிகர் கமலுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். கமலும் குடும்ப விழாக்களில் கூட பூஜா குமாரை மிஸ் பண்ணாமல் சேர்த்துக் கொள்கிறார்.

அவரும் உண்டாம்

அவரும் உண்டாம்

இதனாலேயே இருவர் குறித்தும் ஏராளமான கிசுகிசுக்கள் வைரலானது. இந்நிலையில் நடிகை பூஜா குமார் தலைவன் இருக்கின்றான் படத்தில் லீடிங் ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் நடிகை ரேவதியும் தேவர்மகன் படத்தில் செய்த ரோலையே செய்ய உள்ளார் என கூறப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

படத்தில் நடிக்கவுள்ளவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவர்மகன் படத்தில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரேவதி, கவுதமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சிவாஜி கணேசனுக்கு மகனாக சக்திவேல் கதாப்பாத்திரத்தில் நடித்த கமல், அப்பாவான சிவாஜியான மறைவுக்கு பிறகு கிராம மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் தலைவராக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X