சிபிராஜ் படத்தில் இணைந்த விஸ்வரூப நடிகை!
கன்னட ரீமேக்காக உருவாகும் சிபிராஜின் ‘கபடதாரி’ படத்தில் விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களில் நாயகியாக நடித்த பூஜா குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
Recommended Video
சென்னை: சைத்தான், சத்யா படங்களை தொடர்ந்து இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கபடதாரி எனும் படத்தை இயக்கி வருகிறார்.
கன்னட ரீமேக்கான கபடதாரி படத்தில் நடிகர் சிபிராஜ் மற்றும் நடிகை நந்திதா நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களில் நாயகியாக நடித்த பூஜா குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னட ரீமேக்
கன்னடத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி வெளியான கவுலதாரி படத்தை கபடதாரி எனும் தலைப்பில் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ரீமேக் செய்கிறார். இந்த படத்தில் சிபிராஜ் மற்றும் நந்திதா லீடு ரோலில் நடிக்கின்றனர். நடிகர் நாசர் மற்றும் ஜெயப்பிரகாஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

போராட்டம்
நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், தந்தையின் நிழலில் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால், தற்போது, தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க வேண்டும் என புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கட்டப்பாவ காணோம், சத்யா உள்ளிட்ட வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து சிபிராஜ் நடித்து வருகிறார்.

வெற்றி கிடைக்குமா
விஜய் ஆண்டனியின் சைத்தான் மற்றும் சிபிராஜின் சத்யா படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்திக்கு இதுவரை மிகப்பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில், கன்னடத்தில் இந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்துள்ள கவுலதாரி படத்தை நம்பி இறங்கியிருக்கும் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கதை என்ன
ஹேமந்த் ராவ் இயக்கத்தில் ரிஷி, அனந்த் நாக், சுமன் ரங்கநாதன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் கவுலதாரி. மெட்ரோ பணிகள் நடைபெறும் இடத்தில் மூன்று மண்டை ஓடுகளை காணும் டிராபிக் போலீஸ், ஓய்வு பெற்ற ஒரு காவலதிகாரியை துணைக்கு கொண்டு குற்றவாளிகளை பிடிப்பது தான் கவுலதாரி படத்தின் கதை.

என்ன ரோல்
விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களில் கமல்ஹாசனுக்கு நாயகியாக நடித்திருந்த பூஜா குமார், கபடதாரி படத்தில் பிரபல நடிகை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கன்னடத்தில் சுமன் ரங்கநாதன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அமெரிக்காவில் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளார் பூஜா குமார். கதையை கேட்டு பிடித்து போக அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் ஐதராபாத் பகுதிகளில் நடந்து வருகிறது. வரும் டிசம்பர் இறுதியில் படப்பிடிப்பு நிறைவுபெறும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











