பாலா - மிஷ்கினின் பிசாசு... அதிகாலையில் பூஜை.. பாலா மனைவி குத்துவிளக்கேற்றினார்!

By Shankar

சென்னை: பாலாவின் சொந்தப் பட நிறுவனமான பி ஸ்டுடியோஸுக்காக மிஷ்கின் இயக்கும் புதிய படம் பிசாசு பூஜை இன்று நடந்தது.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்குப் பிறகு மிஷ்கின் இயக்கும் இந்தப் படம், அதிரடி த்ரில்லராக உருவாகிறது.

சென்னை நந்தனத்தில் உள்ள மிஷ்கின் அலுவலகத்திலேயே இந்த பூஜையை எளிமையாக நடத்தி, படத்தை ஆரம்பித்திருக்கிறார் மிஷ்கின்.

Pooja of Mysskin-Bala's Pisasu

இன்று அதிகாலை நடந்த இந்த நிகழ்ச்சியில் மிஷ்கினுடன் இயக்குநர் பாலாவும் பங்கேற்றார். பாலாவின் மனைவி குத்துவிளக்கேற்றினார்.

தமிழச்சி தங்கபாண்டியன், திருமதி மருது உள்பட பலரும் இதில் பங்கேற்று வாழ்த்தினர்.

Pooja of Mysskin-Bala's Pisasu

படத்துக்கு இளையராஜா இசையமைப்பதாகக் கூறப்படுகிறது. பிசாசு படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

19-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. பெரும்பாலும் நள்ளிரவில்தான் இந்த பிசாசை படம் 'பிடிக்க'ப் போகிறார்கள் என்பது ஒரு கூடுதல் தகவல்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X