ப்பா.. என்னவொரு ரொமான்ஸ்.. சட்டை போடாத கணவருடன் நீச்சல் குளத்தில் மஜா பண்ணும் பூஜா!
சென்னை: பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான பூஜா ராமசந்திரன் தனது கணவருடன் நீச்சல் குளத்தில் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
எஸ் எஸ் மியூசிக்கில் விஜேவாக இருந்த பூஜா தான் ஏகப்பட்ட 90ஸ் கிட்ஸ்களின் கனவுக் கன்னி.
நண்பன், பீட்ஸா, காஞ்சனா 2, அந்தகாரம் என 25க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

மிஸ் கோவை
பெங்களூருவில் பிறந்து கேரளாவில் வளர்ந்த பூஜா ராமசந்திரன் கோவையில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். 2004ம் ஆண்டு நடைபெற்ற அழகிப் போட்டியில் கலந்து கொண்டு மிஸ் கோயம்புத்தூர் பட்டத்தை தட்டிச் சென்றார். 2005ம் ஆண்டு மிஸ் கேரளா அழகிப் போட்டியில் கலந்து கொண்ட இவர், ரன்னர் அப் ஆனார்.

எஸ் எஸ் மியூசிக்
சரளமாக ஆங்கிலத்தில் பேசி ரசிகர்களை கவரும் விஜேவாக எஸ் எஸ் மியூசிக்கில் கலக்கிய இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. விஜேவாக பணியாற்றி வந்த இவர், 2012ம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்துள்ளார்.

விவாகரத்து
எஸ் எஸ் மியூசிக்கில் மற்றுமொரு பிரபல விஜேவாக இருந்த விஜே கிரெய்க்கை காதலித்து 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பூஜா, 2017ம் ஆண்டு விஜே கிரெய்கை விவாகரத்து செய்தார். நடிகர் ஜான் கொக்கன் என்பவரை கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி திருமணம் செய்து கொண்டார் பூஜா.

ஆர்யா படத்தில்
நடிகை மீரா வாசுதேவனை விவாகரத்து செய்து விட்டு பூஜா ராமசந்திரனை திருமணம் செய்து கொண்ட ஜான் கொக்கன் பாகுபலி, கேஜிஎஃப், ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். வாட்டசாட்டமான நடிகரான இவரும் பூஜாவும் செய்யும் வொர்க்கவுட் வீடியோக்களும் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

கணவருடன் நீச்சல் குளத்தில்
தொடர்ந்து, தனது கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை பதிவிட்டு வரும் பூஜா ராமசந்திரன், தற்போது நீச்சல் குளத்தில் கணவர் ஜானுடன் குளிக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார். சட்டை அணியாமல் செம செக்ஸியாக ஜான் கொக்கன் இருக்கும் போட்டோக்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

கூர்கில் கொண்டாட்டம்
இந்த சம்மரை கர்நாடகாவில் உள்ள கூர்கில் கொண்டாடி வருகிறர் பூஜா ராமசந்திரன். அங்குள்ள ஒரு ரெசார்ட்டில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தான் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். பாடி பில்டரான ஜான் கொக்கனின் போட்டோக்கள் தான் ரசிகைகளின் பார்வைகளை கவர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











