Pooja Ramachandran: கர்ப்பம் ஆனது முதல்.. குழந்தை பிறந்தது வரை வீடியோ வெளியிட்ட பூஜா ராமசந்திரன்!
சென்னை: விஜே பூஜா ராமசந்திரன் சமீபத்தில் குழந்தை பெற்ற நிலையில், முதல் மாத கர்ப்பம் முதல் கைக் குழந்தையுடன் இருக்கும் வரை ஒவ்வொரு மாத டிரான்ஸ்ஃபர்மேஷனையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார்
எஸ்எஸ் மியூசிக்கில் விஜேவாக இருந்து ஏகப்பட்ட்ட 90ஸ் கிட்ஸின் கிரஷ் ஆக மாறியவர் பூஜா ராமசந்திரன். அதே சேனலில் பூஜாவுடன் இணைந்து பாடல்களை தொகுத்து வழங்கிய கிரெய்க் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால், அந்த திருமணம் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்த நிலையில், இரண்டாவதாக நடிகர் ஜான் கொக்கனை திருமணம் செய்துக் கொண்டார் பூஜா ராமசந்திரன்.

இரண்டு பேருக்குமே இரண்டாம் திருமணம்: மீரா வாசுதேவனை விவாகரத்து செய்த ஜான் கொக்கன் பூஜா ராமசந்திரனை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இந்த புது ஜோடி கடந்த 4 ஆண்டுகளாக தங்கள் காதலையும் வாழ்க்கையையும் இன்ஸ்டாகிராமில் ஒவ்வொரு நொடியும் அப்டேட் செய்து வருகின்றனர்.
சுற்றுலா பிரியர்களான இருவரும் பல இடங்களுக்கு சுற்றுலா செய்வதும் நீச்சல் குளங்களில் பிகினி உடைகளில் குளிக்கும் போட்டோக்களை பகிர்வதுமாக இருந்து வந்தனர்.

ஆண் குழந்தைக்கு அப்பாவான அஜித் பட நடிகர்: அஜித்தின் வீரம் படத்தில் அடியாளாக இருந்து துணிவு படத்தில் வில்லனாக மாறிய ஜான் கொக்கன் தனது இரண்டாவது மனைவி பூஜா ராமசந்திரன் உடன் ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில், அந்த நட்சத்திர தம்பதியினருக்கு சமீபத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு கியான் கொக்கன் என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், முதன் முறையாக குழந்தையை இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தனது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார் பூஜா ராமசந்திரன்.

கர்ப்பம் முதல் குழந்தை பிறந்தது வரை: லேட்டஸ்ட்டாக நடிகை பூஜா ராமசந்திரன் பதிவிட்டுள்ள போஸ்ட்டில் கர்ப்பமான முதல் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் தனது வயிறு கடந்த 10 மாதங்களாக எப்படி மாறியது என்றும் கடைசியாக தற்போது கையில் குழந்தையுடன் நிற்கும் போட்டோ வரை எடிட் செய்து வீடியோவாக ஷேர் செய்துள்ளார்.
பூஜா ராமசந்திரனுக்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர். மீண்டும் பழையபடி ஃபிட்டாகிடுவீங்க என்றும் குழந்தையுடன் ஜாலியா நேரத்தை செலவிடுங்கள் என்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











