Pooja Ramachandran: 55 கிலோவில் இருந்து 75 கிலோவா மாறிட்டேன்.. பூஜா ராமசந்திரனின் சூப்பர் போஸ்ட்!

சென்னை: உடல் எடையை குறைத்து விட்டால் பெரிய சாதனையே செய்தது போல நடிகர்கள் எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டேன் என டிரான்ஸ்ஃபர்மேஷன் போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிடுவது வழக்கம்.

ஆனால், எந்தவொரு பிரபலமும் ஒல்லியாக இருந்து குண்டாக மாறுவதை பெருமையாக நினைத்து போஸ்ட் போட்டதாக சரித்திரமே இல்லை.

இந்நிலையில், விஜே பூஜா ராமசந்திரன் 55 கிலோவில் இருந்து 75 கிலோவாக மாறிவிட்டேன் என்பதை ரொம்பவே சந்தோஷத்துடன் கூறியுள்ளார். மேலும், அதற்கான காரணமும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.

Pooja Ramachandran shares her total pregnancy transform photo in instagram

எஸ்எஸ் மியூசிக் விஜேவான பூஜா விஜே கிரெய்க் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்களுக்கு ஒத்துப்போகாத நிலையில், இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

அதன் பின்னர் சார்பட்டா பரம்பரை, துணிவு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் நடிகர் ஜான் கொக்கனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் பூஜா ராமசந்திரன். இந்த மாத இறுதிக்குள் இந்த நட்சத்திர தம்பதியினருக்கு க்யூட்டான பேபி பிறக்கப் போகிறது என்கின்றனர்.

55 கிலோ டு 75 கிலோ

சமீபத்தில் கூட வளைகாப்பு மற்றும் ப்ரீ பிரெக்னன்ஸி பார்ட்டி என மனைவியையும் அவரது வயிற்றில் வளரும் தனது வாரிசையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி விட்டார் துணிவு பட நடிகர் ஜான் கொக்கன்.

Pooja Ramachandran shares her total pregnancy transform photo in instagram

இந்நிலையில், தற்போது சில மாதங்களுக்கு முன்பாக 55 கிலோவாக இருந்த புகைப்படத்தையும் நிறைமாத நிலவாக தற்போது 75 கிலோவுக்கு அப்கிரேட் ஆகி உள்ள கர்ப்ப புகைப்படத்தையும் கம்பைன் செய்து போட்டு பூஜா ராமசந்திரன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள போஸ்ட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கூடிய சீக்கிரமே குட்டி பூஜாவோ அல்லது ஜூனியர் ஜான் கொக்கனோ பிறக்கப் போகும் நிலையில், ரசிகர்கள் தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் என வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஜான் கொக்கன்

எப்படி இருந்தாலும், குழந்தை பிறந்த அடுத்த இரண்டே மாதத்தில் மீண்டும் பழைய ஃபிட்னஸுக்கு வந்துடுவீங்க பூஜா என்றும் பூஜாவின் வெறித்தனமான வொர்க்கவுட்களுக்கு ஃபேன் ஆன ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Pooja Ramachandran shares her total pregnancy transform photo in instagram

அஜித்தின் துணிவு படத்தில் பேங்க் ஓனராக மெயின் வில்லனாக நடித்த ஜான் கொக்கன், அஜித்தின் ஏகே 62 படத்திலும் அவர் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்காக வித்தியாசமான லுக்கில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் என்றும் தகவல்கல் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X