»   »  நல்ல பிள்ளையாகிறார் பூஜா!

நல்ல பிள்ளையாகிறார் பூஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிங்களத்து அம்மாவுக்கும், பெங்களூர் அப்பாவுக்கும் பிறந்தவரான பூஜா, வந்த புதிதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.ஆனால் அவரது கெட்ட நேரமோ அல்லது ரசிகர்களின் நல்ல நேரமோ அதிக படங்கள் கிடைக்காமல் தத்தித் தத்தி நடந்துவருகிறார்.

இப்போது மாதவனுடன் தம்பி, பிரஷாந்த்துடன் தகப்பன் சாமி ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அஜீத்தைத்தவிர வேறு முன்னணி நாயகர்களுடன் பூஜா இன்னும் ஜோடி சேரவில்லை. அதற்குள் உடல் மெலிந்து இளைத்துப் போய்ஹீரோவுக்கு அக்கா போல காணப்படுகிறார்.

இத்தனைக்கும் காரணம் அம்மணியின் 'உற்சாகம்'தான். பட வாய்ப்புகள் கிடைத்தால் ஏற்படும் உற்சாகம் அல்ல இது, மப்புஏறினால் வரும் உற்சாகம். அடிக்கடி பாட்டிலை உடைக்கும் ரகங்களில் ஒருவர்தான் நமது பூஜா.


அதுவும் சூப்பர் சரக்கு கிடைத்து விட்டால் போதும், எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு குறைந்தது 1 ரவுண்டாவது அடித்து முடித்துவிட்டுத்தான் எழுந்திரிப்பார். எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயாராக இருக்கும் பூஜா, எதைப் பற்றியும் கவலைப்படாதவர்.

ஆனால் இப்போது ஆளே மாறி விட்டார். சில பழைய சகவாசங்களை அடியோடு விட்டு விட்டதாக கூறுகிறார் பூஜா.தமிழ்ப்படங்களில் முன்னணி நடிகையாக உருவெடுக்கும் பொருட்டு, பெங்களூலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து விட்டார்.அண்ணா நகரில் வீடு பார்த்து அங்கு குடித்தனத்தை ஆரம்பித்திருக்கிறார்.

இடையில் எனக்கு சில சிக்கல்கள் இருந்தன. அவை இப்போது தீர்ந்து விட்டன. என்னை அடியோடு மாற்றிக் கொண்டு தமிழின்முன்னணி நடிகை என்ற பெயரை வாங்க முடிவு செய்து விட்டேன். இனிமேல் என்னிடம் விளையாட்டுத்தனம் இருக்காது. மிகவும்சீரியஸாக இருக்கப "போகிறேன். எனது கேரக்டர்களை செலக்ட் செய்து நடிக்கப் போகிறேன்.


வெறும் கிளாமரை வைத்து வண்டியை ரொம்ப நாளைக்கு ஓட்ட முடியாது. நல்ல கேரக்டர்களில் நடித்து நல்ல பெயரை வாங்கவேண்டும். அப்போதுதான் ரசிகர்கள் மனதில் நீண்டகாலம் இடம் பிடிக்க முடியும். பலவிமான கெட்டப்களில் நடித்து ரசிகர்களைஅசர வைக்க வேண்டும்.

நான் பேசும் தமிழ் கொச்சையாக உள்ளதாக கூறினார்கள். எனவே நல்ல தமிழ் கற்று வருகிறேன். விரைவிலேயே சொந்தக் குரலில்டப்பிங் பேசுவேன். தமிழ் சினிமாவில் முன்ணனி இடத்தைப் பிடிக்கும் வரை ஓய மாட்டேன் என்று அடுக்கிக் கொண்டே போனார்பூஜா.

கிளாமர் என்றால் ஓடோடி வந்து நடித்துத் தரும் பூஜாவுக்கு, விட்ட இடத்தைப் பிடிப்பதில் பிரச்சினை இருக்காது. ஆனால், கெட்டபழக்கங்களை அவர் விட்டால் ஒழி பட வாய்ப்பு கிடைப்பது சிரமம்தான். பிருஞ்சிக்கோங்க பூஜா.

Read more about: pooja to abnadon bad habits

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil