»   »  பூஜாவை தேடி வந்த தேனீ !

பூஜாவை தேடி வந்த தேனீ !

Posted By:
Subscribe to Oneindia Tamil

பூஜா வர வர ரொம்பவே நல்ல பிள்ளையாகி வருகிறார். தயாரிப்பாளர் மனம் நோகாமல் நடந்து கொள்வதில் ஆரம்பத்தில் தடுமாற்றமாகஇருந்த பூஜா இப்போதெல்லாம் நல்ல பெயர் பெற்று வருகிறார்.

கடல் போல பல கார்கள் வீட்டில் இருந்தாலும் கம்பெனியிலிருந்து அனுப்பும் காரில்தான் ஷூட்டிங்கிற்கு வருவேன் என்று கோலிவுட் நடிக,நடிகையர் பலரும் பிக்கல் பிடுங்கல் பார்ட்டிகளாக வலம் வருவது சகஜம்.

ஆனால் பூஜா இதில் ரொம்ப வித்தியாசமாக இருக்கிறார். கம்பெனியிலிருந்து கார் வருகிறதா என்று பார்க்கிறார். வராவிட்டால்,சட்டுபுட்டென்று தனது காரிலோ அல்லது வெளியே வந்து வழியில் வருகிற ஆட்டோவை நிறுத்தி ஏறி ஷூட்டிங் ஸ்பாட்டிங்கிற்கு வந்துவிடுகிறார்.

பூஜாவை பார்த்ததும் குஷியாகும் ஆட்டோக்காரர்கள் படு வேகமாக ஆட்டோவை ஓட்டி பத்திரமாக கொண்டு வந்து விடுகிறார்கள்.


பூஜாவின் இந்த சிம்பிளிசிட்டியைப் பார்த்து புளகாங்கிதப்படுகின்றனர் தயாரிப்பாளர்கள்.

வந்து போவதில்தான் இப்படி அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறார் பூஜா. ஆனால் சம்பள விஷயத்தில் படு கறார் பேர்வழியாகத் தான்இருக்கிறார். அதே நேரத்தில் கால்ஷீட் சொதப்பல் செய்வதில்லை.

இப்படியாக நல்ல பெயர் வாங்கிய பூஜாவை சமீபத்தில் தேனீக்கள் போட்டுத் தாக்கிவிட்டன.

பூவில் இருக்கும் தேனைக் குடிக்க தேனீக்களும், வண்டுகளும் வருவது சகஜம். ஆனால் பூஜாவைத் தேனீக்கள் துரத்தினால் என்ன ஆகும்?

அப்படித்தான் நடந்துள்ளது தகப்பன்சாமி படப்பிடிப்பின்போது. பிரஷாந்த், பூஜா ஜோடியாக நடிக்கும் தகப்பன்சாமி படத்தின் ஷூட்டிங்பச்சைமலை பகுதியில் நடந்தது.


அப்போது திடீரென ஒரு தேனீ கூட்டம் படப்பிடிப்பு நடந்த இடத்தை வட்டமிட்டன. அடுத்த சில நிமிடங்களில் சூட்டிங் ஆட்களை பதம்பார்க்க ஆரம்பித்துவிட்டன.

அலறிப் போன பூஜா உதவி கேட்டு சத்தம்போட, பிரஷாந்த் பாய்ந்து வந்து பூஜாவை இழுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.யூனிட்டைச் சேர்ந்த மற்றவர்களும், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓட்டமெடுத்துள்ளனர்.

அப்படியும் கூட பூஜாவால் தேனீக்களிடம் இருந்து தப்ப முடியவில்லை. சில தேனீக்கள் பூஜாவை கடித்து எடுத்துவிட்டன. இதில்காயமடைந்த பூஜாவை தானே அருகாமை டவுனில் இருந்த ஒரு டாக்டரிடம் கூட்டிப் போய் வைத்தியம் கொடுத்தாராம் பிரஷாந்த்.

இந் நிலையில் பூஜா நடித்துள்ள முதலாவது சிங்களப் படம் விரைவில் இலங்கையில் வெளியாகவுள்ளதாம். பூஜாவின் அம்மாகர்நாடகத்தைச் சேர்ந்தவர் தந்தை சிங்களர் என்பது உங்களுக்குத் தெரியும் தானே.

தனது முதல் சிங்களப் படத்தை முதல் நாளே தியேட்டரில் அமர்ந்து ரசிகர்களோடு பார்ப்பதற்காக இலங்கைக்கு பறக்கவுள்ளாராம் பூஜா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil