ராதே ஷ்யாம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. சைடு கேப்பில் கெடா வெட்டிய ரசிகர்கள்.. டிரெண்டாகும் #PoojaHegde

சென்னை: நடிகர் பிரபாஸின் 20வது படமான 'ராதே ஷ்யாம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இருக்கிறது.

#RadheShyam என்ற ஹாஷ்டேக்கை பிரபாஸ் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வரும் நிலையில், சத்தமே இல்லாமல், #PoojaHegde என்ற ஹாஷ்டேக்கை நடிகை பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வரும் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு டோலிவுட்டிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்து கிடைத்திருக்கிறது.

கோலிவுட் டு பாலிவுட்

கோலிவுட் டு பாலிவுட்

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பாலிவுட்டில் ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொகஞ்சதாரோ படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான ஹவுஸ்ஃபுல் 4 படத்திலும் நடித்து பிரபலமான இவர், டோலிவுட்டிலும் கொடி கட்டிப் பறக்கிறார்.

சமந்தாவுடன் சண்டை

சமந்தாவுடன் சண்டை

முகமூடி படத்திற்கு பிறகு டோலிவுட்டில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் இந்த ஆண்டு வெளியான அலா வைகுந்தபுறமுலோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து, சமந்தா ரசிகர்களுக்கும், பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கும் இடையே எந்த நடிகை டாப் என்ற போட்டி உருவாகி இருக்கிறது.

ராதே ஷ்யாம்

ராதே ஷ்யாம்

அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் என டோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை பூஜா ஹெக்டே, தற்போது டார்லிங் பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வரும் படம் தான் ராதே ஷ்யாம். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் பார்வையையும் ஈர்த்து இருக்கிறது.

ரசிகர்கள் செய்த வேலை

ரசிகர்கள் செய்த வேலை

பிரபாஸ் ரசிகர்கள் #RadheShyam என்ற ஹாஷ்டேக்கை அதிக அளவில் டேக் செய்து பல டிரெண்டிங் சாதனைகளை படைக்க முயன்று வருகின்றனர். இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே ரசிகர்கள், தனியாக #PoojaHegde என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து தங்களது தலைவியின் கெத்தை காட்ட முயற்சிகள் செய்து வருகின்றனர்.

இப்படி வளைந்தால்

இப்படி வளைந்தால்

யோகா ஒரு கலை, உங்கள் உடல் ஒரு கலைஞன் என்றும், இப்படி வளைந்து நெளிந்து யோகா செய்தால் இளைஞர்களுக்கு கற்பனை வளம் மென்மேலும், பெருகாதா என பூஜா ஹெக்டேவின் வொர்க்கவுட் புகைப்படங்களை பதிவிட்டு, இந்த ஹாஷ்டேக்கில் அவரது ரசிகர்கள் பதிவுகளை இட்டு வருகின்றனர்.

யாரு பெஸ்ட்

யாரு பெஸ்ட்

தெலுங்கு திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில், பூஜா ஹெக்டேவா அல்லது ராஷ்மிகா மந்தனாவா? உங்களுடைய ஃபேவரைட் யார் என சில ரசிகர்கள் போட்டா போட்டி Poll வைத்தும், பூஜா ஹெக்டே ஹாஷ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர். ராஷ்மிகாவை விட பூஜாவுக்கே அதிக மவுசு என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கிளாமர் குயின்

கிளாமர் குயின்

பாலிவுட் வரை தனது புகழை உயர்த்தியுள்ள நடிகை பூஜா ஹெக்டேவின் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு, கிளாமர் குயின் பூஜா ஹெக்டே தான் என அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகப்படியான ஃபாலோயர்களையும் பூஜா ஹெக்டே கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹாட் பிகினி

ஹாட் பிகினி

ஹாட் பிகினி அணிந்து போஸ் கொடுப்பதில், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு நிகர் யாரும் இல்லை என அவரது ரசிகர்கள் படு கவர்ச்சியான ஸ்கை ப்ளூ கலர் பிகினியில் பூஜா ஹெக்டே இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இந்த #PoojaHegde ஹாஷ்டேக்கை வேற லெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர். ராதே ஷ்யாம் ஹாஷ்டேக்கை விட பூஜா ஹெக்டே ஹாஷ்டேக் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X