Don't Miss!
- News பயங்கரமாக சரிந்த வாக்குப்பதிவு.. 15 ஆண்டுகளில் இதுதான் மோசம்.. அந்தமானில் ஆர்வம் காட்டாத மக்கள்! ஏன்
- Finance அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா.. வாஸ்ட்அப்-க்கு தடை.. என்ன நடக்குது..?!
- Automobiles அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
தீபாவளிக்கு 1200 தியேட்டர்களில் வெளியாகும் பூஜை…
விஷாலின் பூஜை திரைப்படம் உலகம் முழுவதும் 1200 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதாம்.
தீபாவளிக்குத் திரைக்கு வரும் படங்களில் கத்தியுடன் மோதுகிறது பூஜை. ஆனால் கத்தி படம் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். அதே தினத்தில் வெளிவரும் 'பூஜை' படத்தைப் பற்றிய பேச்சு குறைவாகவே இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் கூட 'கத்தி' படத்தைப் பற்றித்தான் நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ கமெண்ட்டுகள் அடிக்கப்பட்டு வருகின்றன. காரணம் விஜய்க்கு இருக்கும் லட்சக் கணக்கான ரசிகர்கள்தான்.
பூஜை
விஷால், ஸ்ருதிஹாசன் நடித்த 'பூஜை' படத்தைப் பற்றி யாருமே கண்டுகொள்ளவில்லை என்றாலும் அந்தப் படம் 'கத்தி'க்கு சிறிதும் குறைவில்லாமல் அமைதியாக ஒரு சாதனையைப் படைத்து வருகிறது.
400 தியேட்டர்களில்
தமிழ், தெலுங்கு, மற்ற மாநிலங்கள், உலகம் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளதாம். தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது பூஜை.
1200 தியேட்டர்களில்
தெலுங்கில் சுமார் 500 திரையரங்குகள், கேரளா, கர்நாடகா மற்றும் உலகமெங்கும் வெளியாகும் திரையரங்குகளைக் கணக்கில் கொண்டால் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹரியின் இயக்கத்தில்
முன்னணி கமர்ஷியல் இயக்குனரான ஹரி, தெலுங்கில் முன்னணி ஹீரோயினான ஸ்ருதிஹாசன் ஆகியோர் இருப்பதால் தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வியாபாரம் நடந்துள்ளதாம்.
தெலுங்கில் அதிக தியேட்டர்கள்
'பூஜை' படம் தெலுங்கில் தமிழை விட அதிக திரையரங்குகளில் வெளியாகிறது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து சமீபத்தில் வெளியாகிய 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படமும் நல்ல வெற்றி பெற்று அவருக்கு மீண்டும் ஒரு ஹிட்டைக் கொடுத்துள்ளதாலும்,
பூஜைக்கு போட்டி யார்?
தமிழில் 'கத்தி' படமும், தெலுங்கில் 'கார்த்திகேயா' என்ற படமும் மட்டுமே 'பூஜை' படத்துக்கு போட்டியாக வெளியாகிறது. 'கத்தியும், கார்த்திகேயாவும்' வெற்றி பெற 'பூஜை' தேவைப்படுகிறது என்கின்றனர்.